- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசியலில் பாஜகவுக்கு கிடைத்த படுதோல்வி, வம்பு இழுத்த காமெடி நடிகர் எஸ்வி சேகர் -...

தமிழக அரசியலில் பாஜகவுக்கு கிடைத்த படுதோல்வி, வம்பு இழுத்த காமெடி நடிகர் எஸ்வி சேகர் – அவங்க அம்மா மசாலா ஆம்லேட் பண்ணி கொடுத்தாங்களாமே?

- Advertisement -

இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடந்து முடிந்த நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நாடு முழுவதும் 291 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளும், 234 தொகுதிகளிலும் காங்கிரஸ், திமுக சார்ந்த கூட்டணிகளும், 18 தொகுதிகளில் இதர கட்சிகளும் வெற்றி பெற்றன.

மொத்தம் 543 தொகுதிகளில், அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் யாதவ் ஆதரவுடன் 3வது முறையாக பாஜக மீண்டும் 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. இதில் அதிக இடங்களை கைபற்றிய வலிமையான எதிர்கட்சியாக காங்கிரஸ், திமுக கட்சி வேட்பாளர்கள் இடம்பெற உள்ளனர்.

கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல், 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக காங்கிரஸ் கூட்டணி, இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றிவிட்டது. இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. பாஜக அதிமுக பாமக என எந்த கட்சிக்கும் மக்கள் முக்கியத்துவம் தரவில்லை என்பதையே இந்த முடிவு காட்டுகிறது.

இந்நிலையில், நடிகர் எஸ்வி சேகர் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார். கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகராக இருந்தவர் எஸ்வி சேகர். விசு இயக்கிய பல படங்களில் எஸ்வி சேகர் நடித்திருக்கிறார். மேலும், நாடகப்பிரியா என்ற பேனரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை நடத்திய பெருமைக்குரியவர் எஸ்வி சேகர்.

சமீபகாலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் எஸ்வி சேகர், பாஜக குறித்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்தும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக தோல்வி கண்டுள்ளது. நட்சத்திர வேட்பாளர்களாக கருதப்பட்ட அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ராதிகா சரத்குமார், இயக்குனர் தங்கர்பசசான், நயினார் நாகேந்திரன் என யாருமே வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை வம்புக்கு இழுக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை நடிகர் எஸ்வி சேகர் செய்துள்ளார். அதில், என் பொறந்த நாளுக்கு எங்கம்மா மசாலா ஆம்லேட் பண்ணி குடுத்தாங்கடா, உனக்கு ஸ்கூல்ல டீச்சர் போட்டாங்களே அந்த முட்டையை வைச்சாடா, நீங்க வாங்குன முட்டைக்கு உன்னையே பிரியாணி ஆக்காம விட்டாங்களே, முதல்ல இடத்தை காலி பண்ணிட்டு ஓடீடு, என்று பதிவில் முட்டை பிரியாணி புகைப்படத்துடன் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

https://x.com/SVESHEKHER/status/1797985245435928846

சற்று முன்