- Advertisement -
Homeபொழுதுபோக்குமுகுந்த் வரதராஜனின் உண்மையான பின்னணியை அமரன் படத்தில் காட்டவில்லை - வைரலான விமர்சனங்களுக்கு டைரக்டர் ராஜ்குமார்...

முகுந்த் வரதராஜனின் உண்மையான பின்னணியை அமரன் படத்தில் காட்டவில்லை – வைரலான விமர்சனங்களுக்கு டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன அதிரடியான பதில்!

- Advertisement -

கடந்த தீபாவளியன்று வெளியான அமரன் படம் வெற்றிகரமாக திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அமரன் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் அமோக வரவேற்பும் ஆதரவும் படத்தை வேற லெவலில் கொண்டாட வைத்திருக்கிறது. படம் வெளியான 3 நாட்களில், உலகம் முழுவதும் ரூ. 104 கோடிகளை அமரன் படம் வசூலை வாரி குவித்தது.

இந்த சூழ்நிலையில் அமரன் படம் குறித்த ஒரு சர்ச்சையும் தற்போது வைரலாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவவீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டுதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது கேரக்டரில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் ஜாதி பின்னணியை வேண்டுமென்றே மறைத்து விட்டார்கள். ஆனால் அவரது மனைவி இந்து ரெபேக்காவின் பின்னணியை மட்டும் தெளிவாக காட்டி இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதில் முகுந்த் வரதராஜனின் உண்மையான ஜாதியை மறைத்து படத்தை எடுத்தது குறித்து நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலரும் பேசியிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று அமரன் படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தார். அப்போது முகுந்த் வரதராஜனின் ஜாதியை மறைத்தது தொடர்பான விமர்சனம் குறித்து படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்தார்.

- Advertisement -

இந்த விழாவில் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது, முகுந்த் வரதராஜனை தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டுமே காட்ட வேண்டும் என அவரது மனைவி இந்து எங்களிடம் கேட்டுக் கொண்டார். தமிழ் ரூட்ஸ் கொண்ட ஒரு நடிகரை தான் முகுந்தனாக நடிக்க வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டார். அதனால்தான் அமரன் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை நான் தேர்வு செய்தேன்.

முகுந்தின் அப்பா மற்றும் அம்மா வைத்த கோரிக்கையில், முகுந்த் தன்னை இந்தியன் என்றுதான் சொல்ல எப்போதுமே ஆசைப்படுவான். தனது சான்றிதழில் கூட எந்தவித குறியீடும் இருக்கக் கூடாது என விரும்புவான். அவனுக்கு இந்தியன், தமிழன் என்கிற அடையாளத்தை மட்டும் படத்தில் கொடுங்க என்று முதல் முறையாக நான் அவர்களை சந்தித்தபோதே என்னிடம் கேட்டுக்கொண்டனர் என இந்த விமர்சனத்துக்கு பதிலளித்து இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்