- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டாக்டராக நடிக்கும் அடுத்த படம், அம்மனாக நடிப்பது...

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டாக்டராக நடிக்கும் அடுத்த படம், அம்மனாக நடிப்பது பிக்பாஸ் ஓவியாவா? இதுல ஜிபி முத்துவும் இருக்காரா? போட்றா வெடிய!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த பவுலராக செயல்பட்ட வீரர் ஹர்பஜன் சிங். பல முக்கிய ஆட்டங்களில் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பலரை தனது பந்து வீச்சால் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பிய பெருமை ஹர்பஜன் சிங்குக்கு உண்டு. இவர் வித்யாசமாக குதித்து ஓடிவந்து பந்து வீசும் அழகே தனி ஸ்டைலாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பே இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் ஹர்பஜன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங், தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது முக்கிய விஷயங்களை பதிவு செய்து தனது ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மீது ஆர்வம் கொண்டுள்ள ஹர்பஜன்சிங், பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

- Advertisement -

இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. எனினும் இந்த படத்தை தொடர்ந்து இப்போது அடுத்த படத்திலும் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். அந்த படம் குறித்த அப்டேட்டை ஹர்பஜன் சிங் தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் சேவியர் உங்களை மகிழ்விக்க வரப்போகுது. உங்கள் அன்புக்காக வெயிட்டிங்… என்று அதில் கூறியுள்ளார்.

- Advertisement -

சேவியர் என்ற இந்த படத்தில் நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். ஓவியா ஆர்மி என்பதே இணையத்தில் வைரலானது. களவாணி கலகலப்பு மெரினா மன்மதன் அன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேவியர் படத்தில் ஓவியா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்பஜன்சிங் இந்த படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் அவருடன் விடிவி கணேஷ் பேப்பர் ஐடி புகழ் ஜிபி முத்து, சிங்கம் புலி, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் ஜான் பால்ராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டாக்டர் கெட்டப்பில் ஹர்பஜன்சிங், 12 கைகளுடன் அம்மன் தோற்றத்தில் ஓவியா மற்றும் ஜிபி முத்து, விடிவி கணேஷ் உள்ள புகைப்படங்கள் காணப்படுகின்றன.

- Advertisement -

சற்று முன்