- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைகனத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் கொஞ்சம்தான் வித்யாசம், அப்படீன்னு கஜினி படத்துல டயலாக் பேசின சூர்யாவே இப்படி பேசலாமா?...

தலைகனத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் கொஞ்சம்தான் வித்யாசம், அப்படீன்னு கஜினி படத்துல டயலாக் பேசின சூர்யாவே இப்படி பேசலாமா? – ரசிகர்கள் கேள்வி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. திரையுலக மார்கண்டேயன் என அழைக்கப்பட்ட சீனியர் நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன். இளைய மகன் கார்த்தியும் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அண்ணன், தம்பி இருவருமே நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் கடைசியாக 2022ம் ஆண்டில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் பலத்த தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு வணங்கான், புறநானூறு போன்ற முக்கிய படங்களில் நடிக்க கமிட் ஆகி, படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட நடிகர் சூர்யா, பிறகு அந்த படங்களில் இருந்து விலகி விட்டார்.

- Advertisement -

டைரக்டர் பாலா, டைரக்டர் சுதா கொங்கராக இயக்கத்தில் அந்த படங்களில் சூர்யா நடிக்க மறுத்தது, அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் இருவருமே மிக முக்கியமான முன்னணி இயக்குனர், பல ஹிட் படங்களை கொடுத்தவர்கள் என்பதால் சூர்யா, அனுசரித்து நடித்திருக்கலாம் என்றும் விமர்சித்தனர்.

எனினும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக 2.5 ஆண்டுகளுக்கு பின், தற்போது வரும் 14ம் தேதி கங்குவா படம் ரிலீஸாகிறது. இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடிகர் சூர்யா மும்பை, டெல்லி, ஐதராபாத், கேரளா என்று சென்று பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா பேசுகையில், இந்திய சினிமா துறையில் எந்த இயக்குனராக இருந்தாலும், கங்குவா படத்தை வாயை பொளந்துட்டு பார்க்க போறாங்க. இதை ரொம்ப அடக்கமா சொல்றேன். கங்குவா படத்தில் காட்சிகளை பார்த்துவிட்டு இது எப்படி சாத்தியமானது என்று எல்லோரும் கேட்கப் போகின்றனர். கரண் ஜோக்கர் உள்ளிட்ட பலர் படம் பார்த்துவிட்டு அப்படிதான் கேட்டனர் என்று பேசியிருக்கிறார்.

கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமியாக வரும் சூர்யா, தலைகனத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் கொஞ்சம்தான் வித்யாசம். என்னால் முடியும் என்றால் அது தன்னம்பிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்றால் அது தலைகனம் என்று கூறியிருப்பார். இப்போது இந்திய சினிமாவில் எந்த இயக்குனராக இருந்தாலும் கங்குவா படத்தை வாயை பிளந்துட்டு பார்ப்பாங்க, என பேசியிருப்பது உச்சபட்ச தலைகனம்தான் என்று அவரது ரசிகர்களே விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்