- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை; அந்தளவுக்கு நானோ,...

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை; அந்தளவுக்கு நானோ, கட்சியோ பலவீனமாக இல்லை – தொல் திருமாளவன் அதிரடி பதில்!

- Advertisement -

அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று, சென்னையில் எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பங்கேற்று அந்நூலை வெளியிட அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார். விழாவில் முன்னாள் நீதிபதி கே சந்துரு, விசிக துணைப் பொதுச் செயாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், இந்த விழாவில் தொல் திருமாவளவன் கலந்துக்கொளவதாக இருந்தார். ஆனால் கூட்டணி கட்சிகளின் அழுத்தம், நெருக்கடி காரணமாக அவரால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் அவர் மனம் முழுவதும் இப்போது இங்குதான் இருக்கிறது என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கரின் நூலை வெளியிட்டு இருப்பதும் அவரைப் பற்றி பேசி இருப்பதும் பெருமை தருகிறது. இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜயும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது.

அந்த நிகழ்வில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ விசிக கட்சியோ பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லை.

ஆனால் நாங்கள் பங்கேற்க போகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதற்கு அரசியல் சாயம் பூச சிலர் முயற்சித்தனர். அதை ஆராய வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள் என்பது முக்கியமானது. ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் அரசியல் களத்தில் நாங்கள் இருக்கிறோம். ஓரளவுக்கு எங்களாலும் யூகிக்க முடியும். அந்த வகையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கி விடுவார்கள். அப்படி அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை.

தமிழகத்தில் எங்கள் கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு தர நான் விரும்பவில்லை. இது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. கூட்டணி சிதையாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் எடுத்த முடிவு. இதில் திமுக எந்த வகையிலும் தலையிடவில்லை. வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனத்தின் அடிப்படையில் தான் ஆதவ் அர்ஜூனா புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றார். அவர் கூறியிருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம் என்றும் திருமாவளவன் கூறியிருக்கிறார்

சற்று முன்