- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலில் விஜய், இன்னொரு கமல்ஹாசனாக இருப்பார், அவருக்கு பெரிய வெற்றி எல்லாம் கிடைக்காது - இப்படி...

அரசியலில் விஜய், இன்னொரு கமல்ஹாசனாக இருப்பார், அவருக்கு பெரிய வெற்றி எல்லாம் கிடைக்காது – இப்படி சொன்னது யார் தெரியுமா? தலைவரே… என்ன இதெல்லாம்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய். தனது 69வது படத்தில் இப்போது நடித்துவரும் விஜய், அடுத்து 2026ம் ஆணடு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு, தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்தே தீருவது என்ற லட்சியத்தில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த அவரது முதல் அரசியல் மாநாட்டிலும் 48 நிமிடங்கள் ஆவேசமாக பேசி மக்களை அசத்தினார். திமுக தான் என்னுடைய அரசியல் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்த விஜய், மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே என் நோக்கம் என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

விஜயின் அரசியல் வருகை குறித்து பலரும் பலவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர். அரசியல் மாநாட்டில் திரண்ட கூட்டம் பல லட்சம் மக்கள் என்றாலும், அதே அளவுக்கு அவருக்கு கணிசமாக லட்சக்கணக்கில் தமிழ்நாடு முழுவதும் ஓட்டுகள் விழுமா, என்பதற்கு 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் முடிவுதான் பதில் சொல்லும்.

இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் கடுமையான விமர்சனங்களில் சிக்கி வருகிறார். விஜய் தேர்தலில் தோற்பது, ஜெயிப்பது அப்பாற்பட்ட விஷயம். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் துணிச்சலாக விஜய் குதித்தது பெரிய விஷயம். ஆனால் அரசியலுக்கு வருவதாக பூச்சாண்டி காட்டிவிட்டு தனது லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய ரஜினியை விட விஜய் தைரியசாலி என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவிடம் விஜய் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, கமல்ஹாசனை போல நடிகர் விஜயும் அரசியலில் முயற்சி செய்கிறார். அது ஒன்றும் தப்பில்லை. ஆனால் விஜய் தமிழக அரசியலில் பெரிதாக வெற்றி பெற முடியாது, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பார் என்று சத்யநாராயணா கூறியிருந்தார். ரஜினி அரசியலுக்கே வரவில்லை. அதே போல், கமல் அரசியல் கட்சி துவங்கிய போது அவரது அண்ணன் சாருஹாசன், என் தம்பியை மக்கள் ஏற்க மாட்டார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பார் என்றும் கூறியிருந்தார். இப்போது இன்னொ கமலாக, விஜய் அரசியலில் இருப்பார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியிருப்பது விஜய் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்