- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதர் படத்துக்கு கிடைத்த மோசமான தோல்வி, ஜெயம் ரவியை நம்பி தேர் இழுக்க முடியுமா? அப்செட்டில்...

பிரதர் படத்துக்கு கிடைத்த மோசமான தோல்வி, ஜெயம் ரவியை நம்பி தேர் இழுக்க முடியுமா? அப்செட்டில் உள்ள பிரபல தயாரிப்பாளர் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தோல்வியை தருகின்றன. ஜெயம் ரவி நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் சந்தோஷ் சுப்ரமணியம், ஜெயம், தனி ஒருவன், போகன், உனக்கும் எனக்கும், அடங்கமறு, பேராணமை என பல வெற்றிப் படங்களை தந்தவர்.

ஆனால் மிருதன், சைரன் 108, இறைவன், அகிலன், பூமி என தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த படங்கள் தோல்வியடைந்து வருகின்றன. எனினும் சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான பிரதர் படம் நிச்சயமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த வெற்றிப் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது ஆசை பிரதர் படத்திலும் நிறைவேறவில்லை.

- Advertisement -

ஜெயம் ரவியுடன் பூமிகா நடித்திருந்த பிரதர் படம் அக்கா, தம்பி பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. நட்டி, சரண்யா பொன்வண்ணன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தும் இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது.

அதுவும் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், காதல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் படங்களை தந்த எம் ராஜேஷ் இயக்கிய படம் பிரதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மாஸ் ஹிட் படங்களை தந்த எம் ராஜேஷ் இயக்கிய படம், இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தரும் என்று ரசிகர்களே எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

இந்த சூழலில், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் மிக முக்கியமானவர், முன்னணி படங்களை தயாரித்து வரும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜெயம் ரவி நடிக்கும் சீனி என்ற படத்தை பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சீனி படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படி தொடர்ந்து பிளாப் படங்களை ஜெயம் ரவி கொடுத்துவரும் நிலையில், பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள சீனி படம் பெரிய வெற்றியை பெறுமா, பெரிய அளவில் லாபம் தராவிட்டாலும் போட்ட முதலீடு பணம் திரும்ப கிடைக்குமா என்ற கவலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருந்து வருகிறார். பிரதர் படத்தை தயாரித்த தயாரிப்பாளரை காட்டிலும், ஐசரி கணேஷ் தான் அதிகமாக அப்செட்டில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்