- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ பற்றி விரைவில்...

சுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ பற்றி விரைவில் அறிவிப்பு – முக்கிய கேரக்டரில் நிவின் பாலி நடிக்கிறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக சுதா கொங்கரா இருந்து வருகிறார். துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், அடுத்ததாக இந்தி எதிர்ப்பு சம்பவங்களை கொண்ட உண்மை கதையை படமாக்க திட்டமிட்டார். புறநானூறு என பெயரிட்ட நிலையில், அந்த படத்தில் சூர்யா நடித்தார்.

ஆனால் மதுரையில் ஷூட்டிங் துவங்கிய சில வாரங்களிலேயே சுதா கொங்கராவிடம், கதையில் மாற்றங்களையும் திருத்தங்களையும் சொன்ன சூர்யா, படப்பிடிப்பில் குறுக்கீடு செய்தார். இதனால் சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் ஒரு கட்டத்தில் அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார்.

- Advertisement -

இதையடுத்து அதே கதையில் நடிகர் சிவகார்த்திகேயனை நடிக்க, சுதா கொங்கரா கமிட் செய்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும் உள்ளது. புறநானூறு என்ற டைட்டிலை மாற்றி, வேறு டைட்டிலில் அதே நேரத்தில் இந்தி எதிர்ப்பு போராட்ட உண்மைை கதையை படமாக்க உள்ளார். இது அவரது கனவு படம் என்றும் சுதா கொங்கரா கூறி வருகிறார்.

இந்த சூழலில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் முரளி மகன் அதர்வா ஏற்கனவே கமிட் ஆகி விட்டார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் முதலில் நடிக்க ஒத்துக்கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறகு என்னால் நடிக்க முடியாது என்று விலகி விட்டார். இந்த சூழலில் அவரது கேரக்டரில் யார் நடிப்பது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

- Advertisement -

தற்போது வந்த புதிய தகவலின்படி சுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவர் மீது சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்து கேரள போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அது பொய்யான புகார் என தெரிய வந்து, அந்த வழக்கில் இருந்து நிவின் பாலி விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுடன் நிவின் பாலி நடிக்கும் நிலையில், வில்லன் கேரக்டரில் நடிக்க பிரபலமான முன்னணி ஹீரோ நடிகர் ஒருவரிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்போது, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பது இவரா, என சினிமா ரசிகர்களே பரபரப்படையும் அளவுக்கு அது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை கமல்ஹாசனாக இருக்குமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்