- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்களுடன் இணக்கமாக செல்ல மறுக்கும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்… வேட்டையன் படத்தின் போது நடந்த சம்பவம்?...

நடிகர்களுடன் இணக்கமாக செல்ல மறுக்கும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்… வேட்டையன் படத்தின் போது நடந்த சம்பவம்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றி என்பது கூட்டணி முயற்சிதான். எந்த ஹீரோவும், எந்த டைரக்டரும், எந்த தயாரிப்பாளரும் தானாக ஒரு திரைப்படத்தை உருவாக்கி விட முடியாது. இதில் முதலீடு போட்ட படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம்தான் படத்தின் ஆணிவேர். ஒரு படத்தை இயக்குனர், ஹீரோ, இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டு உருவாக்குகின்றனர்.

இதில் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்துடன் நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், படக்குழுவினர் என அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும். அதே போல் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமும் உரிய நேரத்தில் தேவையான விஷயங்களை செய்துக்கொடுத்து படக்குழுவுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகின்றன. தயாரிப்பாளர்களுடன் நடிகர்கள் மோதலில், இணக்கமில்லாத போக்கில் செயல்படும் போது அந்த படங்கள் ரிலீஸாவதே கேள்விக்குறியாக மாறுகிறது. அப்படி பல படங்கள் இன்னும் வெளியாகாமல் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றன.

கார்பரேட் தயாரிப்பு நிறுவனமாக லைகா புரடக்சன்ஸ் கத்தி படத்தை தயாரித்து, தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது. விஜய் நடிப்பில் முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வெற்றி பெற்றது, அதிக லாபம் ஈட்டியது.

- Advertisement -

ஆனால் தர்பார், லால் சலாம், இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2, வந்தா ராஜாவாதான் வருவேன், சந்திரமுகி 2 போன்ற படங்களை தயாரித்த வகையில் லைகா புரடக்சன்ஸ் பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இப்போது வேட்டையன் படம் சற்று லாபத்தை கொடுத்துள்ளது. விடாமுயற்சி, இந்தியன் 3 படங்கள் லைகா தயாரிப்பில் உருவாகி உள்ளன.

இந்நிலையில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். அப்போது ரூ. 40 கோடி சம்பளம் பாக்கி வைத்ததால், அந்த படத்துக்கு டப்பிங் பேச வராமல் ரஜினி மறுத்திருக்கிறார். பிறகு ரெட் ஜெயின்ட் மூவிஸ் தலையிட்டு இந்த பிரச்னையை முடித்து வைத்துள்ளது. அதே போல் கத்தி படத்துக்கு பிறகு விஜய் லைகா தயாரிப்பில் நடிக்கவில்லை. விடாமுயற்சி படத்திலும் லைகா மீது அஜீத்துக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. இப்படி நடிகர்களுடன் லைகா நிறுவனம் சுமூகமாக உறவு நீடிப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்