- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் - 10 நாட்களில் வசூலித்தது...

சிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் – 10 நாட்களில் வசூலித்தது எத்தனை கோடிகள் தெரியுமா? அதிலும் அமரன் முந்திக்கிட்டாரே?

- Advertisement -

கடந்த தீபாவளி பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி தமிழில் 3 படங்கள், தெலுங்கில் இருந்து 1 படம் என மொத்தம் 4 படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வரவில்லை. அதே போல் சூர்யா, விக்ரம், தனுஷ் போன்றவர்களின் படமும் வெளியாகவில்லை.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் படமும், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் என 4 படங்கள் ரிலீஸாகின. இதில் பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் ரிலீஸான சில தினங்களிலேயே ரசிகர்களின் அதிருப்தியை பெற்றன.

ஏனெனில் தொடர்ச்சியாக தோல்வி படங்களை தந்துவரும் ஜெயம் ரவி, பிரதர் படத்திலும் அதையே பின்பற்றினார். எம் ராஜேஷ் இயக்கிய இந்த படம் நிச்சயமாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களை கவரும்விதமான படத்தின் கதைக்களம் அமையவில்லை. அதே போல் பிச்சைக்காரன் கேரக்டரில் கவின் நடித்த பிளடி பெக்கர் படமும் பிளாப் ஆனது.

ஆனால் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக சாய் பல்லவி நடிப்பு இந்த படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு சாய்பல்லவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் நடித்ததே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதே போல் தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கிய படம் லக்கி பாஸ்கர். துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டு, தமிழ்நாட்டிலும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அந்த வகையில் கடந்த 10 நாட்களில் அமரன் படம் உலகளவில் ரூ. 210 கோடிகளை கடந்து வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 102 கோடி வசூலை கடந்து, தமிழ்நாடு தியேட்டர்கள் ஷேர் மட்டும் ரூ. 50 கோடி கிடைத்துள்ளது. அதே போல் லக்கி பாஸ்கர் படம் 10 நாட்களில் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்