நடிகர் விஜய் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் மகன் என்பது அனைவரது அறிந்த உண்மைதான். அவரது தாய் ஷோபா ஆரம்பத்தில் பல படங்களில் பாடியிருக்கிறார். விஜயும் பல படங்களில் பாடியிருக்கிறார். விஜயுடன் சேர்ந்து அவரது அம்மா ஷோபாவும் சில பாடல்களை பாடியிருக்கிறார்.
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் சிறுவனாக இந்த விஜய் சில காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். மேலும் பல படங்களின் படப்பிடிப்புகள் விஜய் வீட்டில் நடந்த போது விஜயகாந்த், ஆனந்தராஜ் போன்றவர்கள் விஜய் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து உள்ளனர். அதில் நடிகர் ஆனந்தராஜ், விஜய் அறையில்தான் தங்குவது வழக்கம் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார்.
ஆரம்பத்தில் இருந்தே சினிமா நடிகர்கள், சினிமா படப்பிடிப்புகளை பார்த்து பார்த்து வளர்ந்த விஜய், சினிமாவில் நடிப்பதை தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கிறார். ஆனால் அவர் டாக்டராக வேண்டும் என்பதுதான் எஸ்ஏ சந்திரசகேர், ஷோபா சந்திரசேகரின் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் விஜய் நடிப்பதில்தான் தீவிர ஆர்வம் காட்டியிருக்கிறார்.
அண்ணாமலை படத்தில் ரஜினி பேசிய வசனத்தை பேசிக்காட்டி எஸ்ஏ சந்திரசேகரிடம் நடிக்க அனுமதி கேட்டிருக்கிறார். தன் மகனுக்காக எஸ்ஏ சந்திரசேகரே அவரை வைத்து இயக்கிய முதல் படம்தான் நாளைய தீர்ப்பு. இந்த படம் வெற்றி பெறவில்லை. பிறகு செந்தூரபாண்டி விஜய்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. பூவே உனக்காக படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. இனறு தமிழக முதல்வராக விஜய் போட்டியிடும் அளவுக்கு டாப் ஸ்டார் நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய விஜயின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறுகையில், விஜய் சிறுவனாக இருக்கும் போது அவரது பாட்டியுடன்தான் படுத்து தூங்குவார். அப்போது பாட்டியுடன் அவர் படுத்து தூங்கும் போது அங்கு தலையணைக்கு அடியில் ஒரு கையடக்க பைபிள் இருக்கும். அதில் தினமும் சில வசனங்களை படித்து பார்த்துவிட்டுதான் விஜய் தூங்குவது வழக்கம்.
அதே போல் மறுநாள் காலை எழுந்தததும் தலையணைக்கு அடியில் இருக்கும் கையடக்க பைபிளை எடுத்து சில வசனங்களை படித்துவிட்டுதான் பள்ளிக்கே புறப்படுவார். பள்ளியில் மற்றவர்களிடம், ஆசிரியர்களிடம் பேசும்போது கூட, காதருகே சென்று மிக மெதுவாக தான் விஜய் பேசுவார். அதுபற்றி விஜயின் வகுப்பாசிரியர் என்னிடமே சொன்னார். அப்போது. விஜய் கடவுள் ஆசிர்வாதம் பெற்ற குழந்தை என்று என்னிடமே கூறினார் என்று, அதில் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.





