- Advertisement -
Homeபொழுதுபோக்குகவினின் அடுத்த திரைப்பட இயக்குனர் இவர்தான்... கதையைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் கதாநாயகன்... இந்த...

கவினின் அடுத்த திரைப்பட இயக்குனர் இவர்தான்… கதையைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் கதாநாயகன்… இந்த முறை எடுபடுமா…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்து இருப்பவர் கவின். சீரியல்களில் அவர் பேசப்பட்டாலும் பலருக்கும் பரிச்சயம் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சியில்தான். அங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு சென்ற கவின், சில திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். பிறகு லிப்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவர் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா திரைப்படத்தில் கவின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

படத்தில் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பலராலும் பாராட்டைப் பெற்றார் கவின். தந்தை மகனுக்கு இடையேயான பாசத்தையும், பிரிந்து போன காதலி காதலனுக்கு இடையேயான அன்பையும் உணர்வுபூர்வமாக இந்த திரைப்படம் காட்டி இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஓராண்டு இடைவெளியில் தனது அடுத்த திரைப்படத்தை கொடுத்தார் கவின். இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் டைட்டிலோடு இந்த திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. குறிப்பாக படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் அனைத்தும் செயற்கை தனமாக இருந்ததாக பலரும் கூறினர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கடந்த தீபாவளிக்கு, கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை இயக்குனர் நெல்சன் தயாரித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த திரைப்படமும் வரவேற்பை பெறவில்லை. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து இரண்டு தோல்வி திரைப்படங்கள் அமைந்தன. தற்போது மாஸ்க் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

அவருடன் ஆண்ட்ரியா நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் வெற்றிமாறன். இதே போல் நயன்தாராவுடன் இணைந்திருக்கும் திரைப்படத்தின் சூட்டிங் பணிகளும் சென்று கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கவினின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. தண்டட்டி என்னும் திரைப்படத்தை எடுத்து விமர்சன ரீதியாக பலரது பாராட்டையும் பெற்ற ராம் சங்கையா என்பவர் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

- Advertisement -

சற்று முன்