- Advertisement -
Homeபொழுதுபோக்குஏ கிரேடு பி கிரேடு தரம் பிரிக்கப்பட்ட டாப் நடிகர்கள், இதில் நடிகர் சிம்பு வரிசைக்கு...

ஏ கிரேடு பி கிரேடு தரம் பிரிக்கப்பட்ட டாப் நடிகர்கள், இதில் நடிகர் சிம்பு வரிசைக்கு மாறிய நடிகர் சூரி – அட இந்த 2 ஹீரோக்களுக்கும் பி கிரேடு இடம்தானா?

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் என்றாலே, ஷூட்டிங் ஸ்பாட்டில் சில பந்தாக்களை காட்ட வேண்டும். கொஞ்சம் அலப்பரை செய்ய வேண்டும். மேக்கப் மேன், ஹேர் டிரஸ்சர், பவுன்சர்கள், டிரைவர் என உடன் பலரை அழைத்துக்கொண்டு பவுசு காட்ட வேண்டும். அவர்களுக்கும் பேட்டா கொடுக்கச் சொல்ல வேண்டும். குறிப்பாக, அதிக சம்பளம் கேட்டு தகராறு செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சட்டங்களாக மாறி விட்டது.

இப்படி அலப்பரை செய்யும் சில நடிகர்களின் படங்களை பார்த்தால், எப்போதோ ஒரு வெற்றிப் படம் கொடுத்திருப்பார். அந்த ஒரு படத்தை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட பில்டப்புகள் செய்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களை கதிகலங்க வைப்பார். கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, ராமராஜனிடம் சொல்வது போல், இப்படி எல்லாம் ஒரு பந்தா வேண்டும்பா, என்ற மனநிலைதான் இதற்கு காரணம்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களை ஏ கிரேடு பி கிரேடு என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சமீபத்தில் பிரித்துள்ளனர். அதில் ஏ கிரேடு நடிகர்களின் படங்கள், தியேட்டரில் படம் ரிலீஸ் ஆன 8 வாரங்களில் ஓடிடி யில் ரிலீஸ் செய்யப்படலாம், பி கிரேடு நடிகர்களின் படங்கள், தியேட்டர்களில் ரிலீஸ் ஆன 6 வாரங்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படலாம். மற்ற நடிகர் படங்கள் எப்போது வேண்டுமானாலும் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம், ஆகாமலும் போகலாம்.

அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் ஏ கிரேடு நடிகர்களாகவும், கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு, சூரி உள்ளிட்ட நடிகர்கர் பி கிரேடு நடிகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது ஏ கிரேடு நடிகர்களின் படங்கள் 8 வாரங்களிலும், பி கிரேடு நடிகர்களின் படங்கள் இனி 6 வாரங்களில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் கொடுமை என்னவென்றால், 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது 41 வயதில் நடித்துக்கொண்டு இருக்கும் சிம்புவும் பி கிரேடில் இருக்கிறார். சமீபத்தில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவான நடிகர் சூரி விடுதலை மற்றும் கருடன் ஆகிய 2 வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் அவரும் பி கிரேடு வரிசையில் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே நேரத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரும் இப்போது பி கிரேடு நடிகர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களையும், மிகப்பெரிய வசூலையும் தரும் படங்களிலும் அவர் நடித்தால் ஏ கிரேடு பிரிவுக்கு அவர்களும் வர முடியும். குறிப்பாக சிம்புவும் ஏ கிரேடு நடிகராக பதவி உயர்வு பெற முடியும் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

- Advertisement -

சற்று முன்