தமிழ்நாடு, ஆந்திராவில் சினிமாவின் தாக்கம் மக்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மட்டுமே சினிமாவில் ரசிகர்களிடம் பெயரும், புகழும், செல்வாக்கும் பெற்றுவிட்டால் அரசியலிலும் அந்த இமேஜ் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அது தொடர்ந்தும் நடந்து வருகிறது.
அதனால்தான் எம்ஜிஆர் துவங்கிய இப்போதைய விஜய் வரை பலரும் நடிகர்களாக மக்களிடம் புகழ் பெற்ற பிறகு, அடுத்து சினிமாவில் இருந்து அரசியலுக்கு தாவுகின்றனர். ஆனால் மக்களிடம் ஒரு சில நடிகர்களால் மட்டுமே அதே செல்வாக்கை, புகழை அரசியலிலும் பெற முடிகிறது. மற்றவர்கள், வந்த வேகத்தில் அரசியல் இருந்து காணாமல் போய் விடுகின்றனர்.
தெலுங்கு சினிமா துறையில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் பல வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.
இயக்குனர் ராம் கோபால் வர்மா ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர். அந்த காலகட்டத்தில் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக பல்வேறு திரைப்படங்களை அவர் தயாரித்தார் என்று கூறப்படுகிறது.
கடந்த தேர்தலுக்கு முன்பு ததாகா படத்தின் பிரமோஷன் வெளியிடப்பட்டது. அப்போது சந்திரபாபு நாயுடு அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரின் ஆளுமைகளை இழிவுபடுத்தும் விதத்தில் அவரது அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் ராம் கோபால் வருமா பதிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தனர். மடிப்பாடு மண்டல செயலாளர் ராமலிங்கம் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராம்கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா களத்தை மிஞ்சும் விதமாக தெலுங்கு தேசம் அரசியல் களம் இருந்து வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.





