- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்கள் குதூகலிக்கும் நல்ல இசை மட்டும் தந்தால் போதுமா? கலைத் துறையில் உதாரணமாக மாறிய இசைப்புயல்...

ரசிகர்கள் குதூகலிக்கும் நல்ல இசை மட்டும் தந்தால் போதுமா? கலைத் துறையில் உதாரணமாக மாறிய இசைப்புயல் ஏஆர் ரகுமான் – நீங்க வேற லெவல் ப்ரோ…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைப்பாளராக பல நூறு படங்களுக்கு இசையமைத்தவர் ஏஆர் ரகுமான். ரசிகர்களால் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர். விருது பெற்ற தருணத்தில் கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொன்ன பண்பாளர்.

இந்திய அளவில் கொண்டாடப்படும் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதையும் கடந்து ஏஆர் ரகுமான் மிகச் சிறந்த பண்பாளர். மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்த ரோஜா படத்தில் இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் அறிமுகமான போது அவர் பிளஸ் 2 மாணவர் போல தான் இருந்தார்.

- Advertisement -

ஆனால் முதல் படத்திலேயே சின்ன சின்ன ஆசை என்ற மின்மினி பாடிய பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து ஏஆர் ரகுமான் இசையை ரசிகர்கள் கொண்டாடினர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தது ஏஆர் ரகுமான்தான். 38 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தியன் படத்துக்கு இசையமைத்ததும் அவர்தான்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நண்பர்களே, நான் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். அது நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள் பாதுகாப்பு பற்றியது. நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால் இது ரத்த சக்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல.

- Advertisement -

நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும். இது கடுமையான பார்வை பிரச்னைகளை ஏற்படுத்தும். பார்வை இழப்பு தன்மையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி, வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம் நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையை பாதுகாக்க உதவலாம்.

இன்று நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையை பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். இந்த செய்தியை பரப்பி ஒளிமயமான எதிர்காலத்தை காண அனைவருக்கும் உதவுவோம் நன்றி, என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார். இந்த சமூக விழிப்புணர்வு பதிவை செய்துள்ள இசைப்புயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்