- Advertisement -
Homeபொழுதுபோக்கு16 நாட்களில் அமரன் படம் வசூல் எவ்வளவு தெரியுமா? விரைவில் அந்த சாதனை புரிந்து விடுமா?...

16 நாட்களில் அமரன் படம் வசூல் எவ்வளவு தெரியுமா? விரைவில் அந்த சாதனை புரிந்து விடுமா? உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை முதல் நாளிலேயே பெற்றது.

மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதை என்ற நிலையில், இந்த படத்தின் திரைக்கதையும் சாய்பல்லவியின் நடிப்பும் படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்டுகளாக அமைந்தன. வழக்கமாக ஜாலியான கேரக்டரில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் கம்பீரமான நடிப்பு ரசிகர்களை அசத்தியது.

- Advertisement -

அதனால் அமரன் படம் ரிலீஸான 3 நாட்களில் உலகளவில் ரூ. 104 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்தது. முதல் தடவையாக சிவகார்த்திகேயன் நடித்த படம் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த சாதனை அமரன் படம் மூலம் அவருக்கு கிடைத்தது.

அமரன் படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டி இருந்தனர். படத்தின் தயாரிப்பாளர் நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தின் வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

- Advertisement -

இந்நிலையில், கடந்த 31ம் தேதி ரிலீஸான அமரன், கடந்த 16 நாட்களில் செய்த வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இதுவரை உலகளவில் மொத்தம் 280 கோடி ரூபாய்க்கு மேல் அமரன் படம் வசூலை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 135 கோடி வசூலை எட்டியுள்ளது.

இன்னும் சில தினங்களில் அமரன் படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கங்குவா படம் 490 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிய அமரன் எடுக்கப்பட்டது. கங்குவா படம் ரிலீஸ் ஆகாமல் இருந்திருந்தால், அமரன் படம் தமிழகத்தில் ரூ. 150 கோடியை கடந்து, உலகளவில் ரூ. 300 கோடியை நேற்றே கடந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்