- Advertisement -
Homeபொழுதுபோக்குஹிந்தி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க விஜய் போட்ட பிளான், சஸ்பென்ஸ் வைக்கும் ஜவான் படக்குழு

ஹிந்தி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க விஜய் போட்ட பிளான், சஸ்பென்ஸ் வைக்கும் ஜவான் படக்குழு

- Advertisement -

அட்லீ பாலிவுட்டில் இயக்கியுள்ள “ஜவான்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதனிடையே “ஜவான்” திரைப்படத்தில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற ஒரு தகவல் பல நாட்களாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாது சமீபத்தில் “ஜவான்” திரைப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான யானிக் பென், ஒரு பேட்டியில் பேசியபோது, “விஜய்யும் ஷாருக்கானும் ஒரே ஃபிரேமில் வருவதை ரசிகர்கள் பார்ப்பார்கள்” என கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் அதன் பின் அவர் சொன்னது விஜய்யை அல்ல விஜய் சேதுபதியை என்று தெரிய வந்தது. எனினும் ரசிகர்கள் பலரும் அந்த ஸ்டன்ட் மாஸ்டர் மழுப்புகிறார் என்றே கூறி வருகின்றனர். ரசிகர்களை பொறுத்தமட்டில் “ஜவான்” படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றே நம்புகின்றனர்.

இந்த நிலையில் தற்போது “ஜவான்” திரைப்படத்தை குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது “ஜவான்” திரைப்படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளது ஓரளவுக்கு உண்மை என்றே கூறுகின்றனராம். விஜய்யின் “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவருகிறது. ஆனால் அதற்கு முன்னமே செப்டம்பரில் “ஜவான்” வெளிவந்துவிடும்.

- Advertisement -

ஆதலால் “ஜவான்” திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் ஹிந்தி ரசிகர்களின் கவனத்தை “லியோ” பக்கம் திருப்ப விஜய் முடிவெடுத்திருந்தாராம். அதாவது “லியோ” திரைப்படத்திற்கான மறைமுக புரொமோஷனுக்காகவும் ஹிந்தி ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காகவும் விஜய், “ஜவான்” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது, அட்லீ விஜய்யை வைத்து “தெறி”,  “மெர்சல்”, “பிகில்” ஆகிய ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ஆதலால் அட்லீயுடனான நட்பின் காரணமாக கூட விஜய் “ஜவான்” படத்தில் நடித்திருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்