- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்த அவரது மனைவி சாயிரா பானு; முடிவுக்கு வந்த 29 வருட...

ஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்த அவரது மனைவி சாயிரா பானு; முடிவுக்கு வந்த 29 வருட திருமண வாழ்க்கை – என்னாச்சு என குழப்பமடைந்த ரசிகர்கள்!

- Advertisement -

இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். தமிழில் மணிரத்னம இயக்கத்தில் ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே இவரது இசையில் சின்ன சின்ன ஆசை பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு. இவர்கள் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர். இதில் அமீன் இசையமைப்பாளராக முயற்சித்து வருகிறார். சமீபமாக ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிகளில் அமீன் காணப்படுகிறார். ஏஆர் ரகுமானின் மகள் கதீஜாவும் இசையமைப்பாளராக உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஏஆர் ரகுமானை பிரிவதாக அவர்கள் மனைவி சாயிரா பானு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது வழக்கறிஞர் வந்தனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது இசை ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருமணமாகி 29 ஆண்டுகள் கழித்து சாயிரா பானு, தனது கணவர் ஏஆர் ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவெளியை தொடர்ந்து வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

- Advertisement -

ஆனால் இதுகுறித்து இன்னும் ஏஆர் ரகுமான் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. ஏஆர் ரகுமான் – சாயிரா பானு தம்பதியின் இரண்டு மகள்களில் மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இரண்டாவது மகள் ரஹிமா, மகன் அமீன் ஆகியோருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு பிரிவதாக அறிவித்துள்ளதால், ஏஆர் ரகுமானின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே ஏஆர் ரகுமானின் அக்கா மகன் ஜீவி பிரகாஷ்குமார், சைந்தவி விவாகரத்தை அறிவித்த நிலையில் இப்போது ஏஆர் ரகுமான் வாழ்க்கையிலும் அது நடந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்