- Advertisement -
Homeபொழுதுபோக்குகவின் படத்துக்கு இசையமைக்க டைரக்டரை இழுத்தடித்த அனிருத், அதிரடி முடிவெடுத்த படத்தின் தயாரிப்பாளர்- நீங்க இப்படி...

கவின் படத்துக்கு இசையமைக்க டைரக்டரை இழுத்தடித்த அனிருத், அதிரடி முடிவெடுத்த படத்தின் தயாரிப்பாளர்- நீங்க இப்படி பண்ணலாமா ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ஜெயிலர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர். அவர் இசையமைக்க கமிட் ஆன நிறைய படங்கள் உள்ள நிலையில் அனிருத் மிக பிஸியாக இருந்து வருகிறார். தளபதி 69, ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்கள் அவரது கைவசம் உள்ளது.

இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ், கவின் கதாநாயகனாக நடிக்கும் கிஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஷூட்டிங் ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். இவர் வினியோகஸ்தராகவும் உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க ஏற்கனவே கமிட் ஆகியிருந்தார்.

- Advertisement -

ஆனால் கிஸ் படத்துக்கு இசையமைத்து தருவதில் அனிருத் தொடர்ந்து தாமதம் செய்தார். 3 பாடல்களை மட்டுமே டியூன் போல தந்து, இதை வைத்து படத்தை ஷூட் செய்யுங்கள். பின்னால் அந்த பாடல்களை முழுமையாக இசையமைத்து தருகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஆனால் பல மாதங்களாகியும் கிஸ் படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்து தரவில்லை. மொத்தம் 7 பாடல்களில் 3 பாடல்களை மட்டுமே அதுவும் முழுமையின்றி அனிருத் தந்திருக்கிறார். படத்தின் இயக்குனர் சதீஷ் அவரிடம் நடையாக நடந்து மீதி 4 பாடல்களை கேட்ட நிலையில், அதை தருவதற்கான அறிகுறியே அனிருத்திடம் இல்லாதது கண்டு நொந்து போய்விட்டார்.

- Advertisement -

இதையடுத்து கிஸ் படத்தின் தயாரிப்பாளர் ராகுல், கிஸ் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தை தூக்கி விட்டு, அவருக்கு பதிலாக ஜென் மார்டின் என்ற இசையமைப்பாளரை கமிட் செய்துவிட்டார். அனிருத் தந்த 3 பாடல்களை நிராகரித்துவிட்டு, 7 பாடல்களையுமே ஜென் மார்டின் இசையமைக்குமாறு கூறிவிட்டனர்.

இதனால் கிஸ் படத்தில் இருந்து அனிருத் விலக்கப்பட்டு அந்த இடத்தில் ஜென் மார்டின் இசையமைக்கிறார். மேலும் பிளடி பெக்கர் படத்துக்கு பிறகு வெளியாகும் கிஸ் படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரே வினியோகஸ்தர் என்பதால், அவரே இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்