- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகங்கள் குறித்து இயக்குனர் செல்வராகவன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட் -...

புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகங்கள் குறித்து இயக்குனர் செல்வராகவன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட் – என்ன ப்ரோ… கடைசியில் இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க?

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க முன்னணி இயக்குனராகவும், முக்கிய படைப்பாளியாகவும் இருப்பவர். இவர் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன். நடிகர் தனுஷின் சொந்த அண்ணன், நடிகை சோனியா அகர்வாலின் முன்னாள் கணவர் என்ற அடையாளங்களை கொண்டவர்.

இயக்குனராக மட்டுமின்றி சமீபமாக நிறைய படங்களில் செல்வராகவன் சிறப்பாக நடித்தும் வருகிறார். சமீபத்தில் தனது தம்பி தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் நண்பராக இவரது நடிப்பு ரசிகர்களின் மனம் கவர்ந்தது. மார்க் ஆண்டனி, பகாசுரன், பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் செல்வராகவன் சிறப்பாக நடித்திருந்தார்.

- Advertisement -

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக செல்வராகவன் அறிமுகமானார். அதன்பிறகு 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் மயக்கம் என்ன இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றார்.

இவரது இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதும் தனி வரவேற்பு உள்ளது. அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை தத்துவங்களை கூறும் வீடியோக்களையும் செல்வராகவன் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

அடுத்ததாக ஆர்ஜே பாலாஜிநடிப்பில் வருகிற 29ம் தேதி வெளியாகும் சொர்க்கவாசல் என்ற படத்திலும் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சொர்க்கவாசல் படம் வரும் 29ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஆர்ஜே பாலாஜி மற்றும் செல்வராகவன் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் கூறுகையில், புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை 2ம் பாகமாக வெப் தொடர்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். வெப் தொடர்களாக இருந்தால் நேரம் அதிகமாக கிடைக்கும். அதனால் சொல்ல வந்த கருத்துகளை வெப் தொடரின் மூலம் தெளிவாக கூற முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால் வெப் தொடராக வருவதற்கும், படமாக தியேட்டரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் என்ன ப்ரோ இப்படி சொல்றீங்க என்று செல்வராகவன் ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்