- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து பட இயக்குனரை ஏமாற்றிய தயாரிப்பாளர், கோபத்தில் தமிழரசன் பச்சமுத்து செய்த அந்த விஷயம்...

லப்பர் பந்து பட இயக்குனரை ஏமாற்றிய தயாரிப்பாளர், கோபத்தில் தமிழரசன் பச்சமுத்து செய்த அந்த விஷயம் – நிஜத்துலலேயும் டைரக்டர் கெத்து தாம்பா!

- Advertisement -

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. ஹரீஷ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, காளி வெங்கட், பால சரவணன், ஜென்சன் திவாகர், கீதா கைலாசம், தேவதர்ஷினி, டிஎஸ்கே உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷ், படத்தில் கிரிக்கெட் வீரராக கெத்து என்ற பெயரில் அழைக்கப்படுவார். அதனால் இந்த படத்துக்கு பிறகு பலரும் அவரை கெத்து தினேஷ் என்று அழைக்கின்றனர். அதே போல் பார்க்கிங் படத்துக்கு பிறகு ஹரீஷ் கல்யாணுக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

லப்பர் பந்து படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ் லட்சுமண் குமார் மற்றும் ஏ வெங்கடேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 35 கோடிக்கு மேல் பெரிய வசூலை சாதித்திருக்கிறது. டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் லப்பர் பந்து படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சூழலில், லப்பர் பந்து படத்தை பிறமொழியில் ரீமேக் செய்ய சில தயாரிப்பாளர்கள், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். இறுதியாக லப்பர் பந்து படத்தை ரீமேக் செய்ய அனுமதித்து ரூ. 2 கோடி வரை அதன் தயாரிப்பாளர்கள் விலை பேசியுள்ளனர். அதற்கு சம்மதமும் பெற்றுள்ளனர்.

- Advertisement -

இதையடுத்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவை நேரில் அழைத்து பேசிய லப்பர் பந்து தயாரிப்பாளர்கள், பிறமொழியில் ரீமேக் செய்ய ரூ. 10 லட்சம் விலை பேசியுள்ளோம். அதில் இயக்குனர் பங்கு 40 சதவீதம் என்ற அடிப்படையில் உங்களுக்கு ரூ. 4 லட்சம் தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே இந்த படத்தை ரூ. 2 கோடிக்கு ரீமேக் விலை பேசிய விவரம் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு தெரிந்துள்ளது.

லப்பர் பந்து ரீமேக் உரிமம் ரூ. 2கோடிக்கு விற்றது எனக்கு தெரியும் என்று அவர்களிடம் தமிழரசன் பச்சமுத்து கோபமாக பேசியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் அந்த 4 லட்சம் ரூபாயும் எனக்கு வேண்டாம் என ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்திருக்கிறார் தமிழரசன் பச்சமுத்து. சினிமாவில் வரும் தினேஷ் கேரக்டர் மட்டுமல்ல, தனக்கு நியாயமாக வர வேண்டிய ரூ. 80 லட்சத்தை தூக்கி எறிந்துவிட்டு வந்த தமிழரசன் பச்சமுத்து உண்மையிலும் கெத்துதான் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்