- Advertisement -
Homeபொழுதுபோக்குஊ சொல்றியா மாமா… குத்தாட்டம் மாதிரி புஷ்பா 2 கிஸ்ஸிக் பாடல் ஹிட் ஆகுமா? நடிகை...

ஊ சொல்றியா மாமா… குத்தாட்டம் மாதிரி புஷ்பா 2 கிஸ்ஸிக் பாடல் ஹிட் ஆகுமா? நடிகை சமந்தா காட்டிய ரியாக்‌ஷன் – ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிளாக்பஸ்டர் மூவி புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

செம்மர கடத்தல் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் புஷ்பராஜ் என்ற கேரக்டரில் நடித்திருந்த அல்லு அர்ஜூனுக்கு, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு சிறந்த நடிகர் தேசிய விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் அவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இதையடுத்து புஷ்பா படத்தின் 2ம் பாகம் 3 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு, வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா தி ரூல் படம் வெளிவருகிறது. இந்த படத்துக்கான பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் புஷ்பா முதல் பாகம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து டிரண்டிங் ஆகின. அதிலும் குறிப்பாக ஊ சொல்றியா மாமா என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியிருந்தார். இந்த ஐட்டம் பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் நடிகை சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் பெரிய அளவில் வைரலாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதே போல் புஷ்பா 2 படத்திலும், கிஸ்ஸிக் என்ற தலைப்பில் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த குத்தாட்ட பாட்டுக்கு தெலுங்கு முன்னணி நடிகை ஸ்ரீ லீலா, அல்லு அர்ஜூனுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். படத்தில் நாயகி ராஷ்மிகா மந்தனா என்றாலும், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் ஸ்ரீ லீலா கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

புஷ்பா 2ல் உள்ள கிஸ்ஸிக் பாடல் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, ஸ்ரீ லீலா பிரமாதப்படுத்தி விட்டார். புஷ்பா 2 ரிலீஸ்க்காக காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். சமந்தாவே இப்படி ரியாக்சன் செய்திருப்பதால், இந்த பாட்டும் ஹிட்டுதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்