- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பார்த்திபனும் எதிர்காலத்தில் அரசியல் கட்சி துவங்க போறாராம், திமுகவை விஜய் விமர்சிப்பது தவறல்ல என்றும்...

நடிகர் பார்த்திபனும் எதிர்காலத்தில் அரசியல் கட்சி துவங்க போறாராம், திமுகவை விஜய் விமர்சிப்பது தவறல்ல என்றும் ஒரே போடு – என்னய்யா நடக்குது இங்கே?

- Advertisement -

வழக்கமாக தமிழ்நாட்டில் நடக்கும் சட்டசபை தேர்தல்களில் அதிமுகவை திமுக எதிர்க்கும், திமுவை அதிமுக எதிர்க்கும். இந்த இரண்டு கட்சிகளுடன் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும். இதில் மெஜாரிட்டியான கூட்டணி வெற்றி பெற்று திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்கும். இதுதான் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலின் போது ஒவ்வொரு முறையும் நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த 2 சட்டசபை தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை வாங்கி வருகிறது. அதே போல் அம்மா மக்கள் கட்சி முன்னேற்றக் கழகம் சார்பில் டிடிவி தினகரன் தரப்பும் கணிசமான ஓட்டுகளை பெறுகிறது. சுயேட்சை ஓட்டுகளும் சில நேரங்களில் கட்சிகளின் கணிசமான ஓட்டுகளை பிரித்து விடுகின்றன.

- Advertisement -

ஆனால் இந்த முறை திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி சட்டசபை தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில் திமுக அதிமுக கூட்டணி கட்சிகளை விரும்பாத, புதிய அரசியல் மாற்றத்தை விரும்புகிற மக்களின் ஓட்டுகள் மொத்தமாக விஜய் கட்சிக்கு விழ அதிக வாய்ப்புள்ளது.

அரசியல் மாநாட்டில் தவெக கட்சி தலைவரான நடிகர் விஜய், முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தலில் எனது கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரம் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதுவரை திமுக, அதிமுக ஆட்சியில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை துவங்கிய போது அவருக்கு எந்த தொகுதியிலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தோல்விகளை தான் அவர் சந்தித்தார். ஆனால் விஜய்க்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு பெரிய அளவில் அவரது வெற்றிக்கு துணை நிற்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் பார்த்திபன் ஒரு பதிவில், தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆளுங்கட்சியை எதிர்த்துதான் அரசியல் நடத்தினார். ஆளுங்கட்சியை எதிர்த்தால் தான் ஹீரோவாக முடியும். எனக்கும் அரசியலில் ஆர்வம் உண்டு. யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன். அரசியல் கட்சி தொடங்க ஆசை இருப்பதால் எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன் என்று நடிகர் பார்த்திபன் உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்