- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் துவங்கி 14 மாதங்களுக்கு பிறகு வெளியானது விடாமுயற்சி டீசர்… அஜீத்குமார் செம மாஸ் காட்றாருபா…...

ஷூட்டிங் துவங்கி 14 மாதங்களுக்கு பிறகு வெளியானது விடாமுயற்சி டீசர்… அஜீத்குமார் செம மாஸ் காட்றாருபா… – உற்சாகத்தில் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. எச் வினோத் இயக்கிய இந்த படம் கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி 11ம் தேதியன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. அதன்பிறகு 8 மாதங்கள் கழித்து அக்டோபர் 4ம் தேதி விடாமுயற்சி ஷூட்டிங், அஜர்பைஜானில் துவங்கியது.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் பல காரணங்களால் இந்த ஷூட்டிங் இடையிடையே தடைபட்டு, மீண்டும் மீண்டும் விடாமுயற்சியுடன் நடத்தப்பட்டது.

- Advertisement -

வழக்கமாக ஒரு படத்தில் நடித்தால், அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிப்பதுதான் அஜீத்குமாரின் வழக்கம். ஆனால் அவரது வழக்கத்தையே விடாமுயற்சி படம் மாற்றி விட்டது. ஏனெனில் விடாமுயற்சி ஷூட்டிங் காலத்திலேயே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் விடாமுயற்சி படம் வெளியாக உள்ளது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அஜர்பைஜான், ஐதராபாத் பகுதிகளில் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இன்னும் ஒரு பாடல் மட்டுமே எடுக்கப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. எல்லாமும் எல்லோரும் கைவிடும்போது உன்னை நம்பு என்ற வாசகங்களுடன் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் பொங்கல் 2025 ரிலீஸ் என்றும் அந்த டீசரில் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. அதனால் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் என்பது உறுதியாகி விட்டது. அதனால் அஜீத்குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி, விடாமுயற்சி படத்துக்கு பிறகு திரைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி ஷூட்டிங் துவங்கியது. 14 மாதங்கள் ஆன நிலையில் இப்போது டீசர் வெளியாகி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் பொங்கலுக்கு துணிவு படம் வெளியான நிலையில், 2 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் 2025ம் ஆண்டில் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=Wtq3RRORVx4

- Advertisement -

சற்று முன்