- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா, விஜய்க்கும் அஜீத்குமாருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? நம்பவே முடியலையே…. அசந்து போன ரசிகர்கள் -...

அடேங்கப்பா, விஜய்க்கும் அஜீத்குமாருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? நம்பவே முடியலையே…. அசந்து போன ரசிகர்கள் – இயற்கை கூட இவர்களது நட்புக்கு மாஸா சப்போர்ட் பண்ணுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இப்போது இருப்பவர்கள் 4 பேர் மட்டும்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜீத்குமார் மட்டுமே டாப் ஸ்டார் நடிகர்களாக உள்ளனர். மற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்தடுத்த நிலைகளில்தான் உள்ளனர். இந்த 4 நட்சத்திர நடிகர்கள் மட்டுமே, நம்பிக்கை தரும் வசூல் ராஜாக்களாக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர்.

இதில் நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு நடிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதனால் இதுவே அவரது கடைசி படமாக இருக்கும். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளில் விஜய் முழுவீச்சில் செயல்பட போகிறார்.

- Advertisement -

அதே போல் நடிகர் அஜீத்குமார் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது. தொடர்ந்து குட்பேட் அக்லி படமும் ரிலீஸ் செய்யப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஏனெனில் குட்பேட் அக்லி ஷூட்டிங்கும் நிறைவு பெற்றதாக தெரிகிறது.

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் தற்போது துபாயில் நடக்க உள்ள கார் பந்தயம் ஒன்றில் பங்கேற்க உள்ளார். தற்போது அவர் பங்கேற்க உள்ள கார் பந்தயம் சார்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் சிவப்பு, மஞ்சள் நிற வண்ணமிட்ட கார் மற்றும் அதே வண்ணங்களில் அமைந்த டிரக்சூட் டிரஸ்சில் அஜீத்குமார் காணப்படுகிறார்.

- Advertisement -

இதை பார்த்த அஜீத்குமார், விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் அசந்து போய்விட்டனர். ஏனெனில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் பிரதானமாக இடம்பெற்ற நிறங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள்தான். அதனால் கழுத்தில் அணியும் கட்சி மப்ளர் கூட சிவப்பு, மஞ்சள் நிறத்தில் அசத்தலாக இருக்கின்றன. விஜய் அதை அரசியல் மாநாட்டில் ரேம்ப் வாக்கில் ஓடிய போது கழுத்தில் போட்டுக்கொண்டு ஓடி வந்தது செம டிரண்டிங் ஆனது.

இந்நிலையில் துபாயில் அஜீத்குமார் பங்கேற்க உள்ள கார் பந்தயத்தில் அவர் ஓட்டப் போகும் கார் முழுவதும் மஞ்சள் சிவப்பு நிறங்களுடன், விஜயின் தவெக கட்சி கொடியை போன்றுதான் காணப்படுகிறது. இப்படி தமிய் திரைத்துறையில் உள்ள நண்பர்களாக அவர்களின் ஒற்றுமை, இப்படி இயற்கையாவே அமைந்து அவருக்கு கட்சி, இவருக்கு கார் என்ற அளவில் அவர்களது விருப்பங்களை, லட்சியங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்