- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமனார் ரஜினியை தொடர்ந்து மருமகன் தனுஷும் தாராவியில் அரசியல் பேசுகிறாரா?... அடுத்த தெலுங்கு படத்திற்காக நடிகர்...

மாமனார் ரஜினியை தொடர்ந்து மருமகன் தனுஷும் தாராவியில் அரசியல் பேசுகிறாரா?… அடுத்த தெலுங்கு படத்திற்காக நடிகர் எடுக்கும் ரிஸ்க்!…

- Advertisement -

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என்று அனைத்து மொழிகளிலும் சுற்றி சுற்றி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால் உற்சாகமான நடிகர் தனுஷ் அடுத்தடுத்து படங்களின் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஏற்கனவே ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தின் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருடன் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

இலங்கை பிரச்சனையும் கேப்டன் மில்லர் படத்தின் மறைமுக கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டரிலேயே பிரம்மாண்ட துப்பாக்கியுடன் சடைமுடி வைத்துக் கொண்டு தனுஷ் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் சரியான ஒரு நிமிடம் 33 வினாடிகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தனுஷின் 51வது படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியது.

- Advertisement -

அது வெறும் அறிவிப்புடன் மட்டும் நின்றிருந்த நிலையில், தற்போது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு முன் ஏழை மக்கள் வாழும் குடிசைக்கும் இடையில் பணம் இருப்பதாக போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையின் தாராவி பகுதி அரசியலை தனுஷ் பேச உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் நாகர்ஜுனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என்று 5 மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

- Advertisement -

சற்று முன்