- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரபு என்னை அசிங்கப்படுத்த போறியான்னு என்னிடம் கேட்டார், அதுக்கு காரணம் அந்த இயக்குனர்தான் -...

நடிகர் பிரபு என்னை அசிங்கப்படுத்த போறியான்னு என்னிடம் கேட்டார், அதுக்கு காரணம் அந்த இயக்குனர்தான் – நடிகர் ஜெயராம் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயராம் நடிகை ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் மிஷ்கின் சாண்டி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் ஜெயராம் கூறியதாவது, பொன்னியின் செல்வன் பட விழாவில் நான் நடிகர் பிரபு குறித்து மிமிக்ரி செய்து கலாய்த்து பேசியது இணையத்தில் மிகவும் வைரலாகி விட்டது. அது பெரிய அளவில் ரசிகர்களிடம் போய் சேர்ந்து விட்டது.

- Advertisement -

ஆனால் உண்மையில் அது நானாக விரும்பி பேசவில்லை. அந்த விழாவை மாலை 6:30 மணிக்கு துவங்க திட்டமிட்டு இருந்தனர். இயக்குனர் மணிரத்னம் சரியான நேரத்தில் விழாவை துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவருக்கு சரியான நேரத்தில் எதுவும் நடக்க வேண்டும்.

ஆனால் புரொடியூசர் எல்லாம் விழாவுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாகிவிட்டது. அதனால் விழாவில் எதையாவது ஜாலியாக பேசி நேரத்தை கடத்துமாறு எனக்கு சுஹாசினி மணிரத்னம் அறிவுறுத்தினார். மணிரத்னமும் அப்போது ஒரு சின்ன காகிதத்தில், படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஏதாவது விஷயங்களை பேசி நேரத்தை சுவாரசியமாக மாற்று என்று எனக்கு அவர் கூறினார்.

- Advertisement -

அதனால் நடிகர் பிரபு குறித்து பேசுவதற்கு முன்பு அவரிடம் நான் சைகையில் அவரிடம் அதற்கு அனுமதி கேட்டேன். அதற்கு அவர் என்ன என்னை பத்தி பேசி அசிங்கப்படுத்த போறியா என்று ஜாலியாக கேட்டார். அதன்பிறகுதான் மேடையில் பிரபு மாதிரி நான் மிமிக்கிரி செய்து பேசினேன். அது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிட்டது. இந்த அளவுக்கு அது மக்கள் மத்தியில் சென்று சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அதேபோல் மணி பசிக்குது மணி என்று நான் பிரபு போல் பேசிய அந்த டயலாக் ஒரு ஓட்டலுக்கு பெயராகவே வந்து விட்டது. அந்தளவுக்கு அன்று மேடையில் நான் பேசிய மிமிக்ரி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. என்னை போல் பலரும் மிமிக்ரி செய்வார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட ஆட்கள் முன்னிலையில் பண்ண மாட்டார்கள். ஆனால் பிரபு என்னை அதற்காக பாராட்டவே செய்தார் என்று நடிகர் ஜெயராம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்