தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி துவங்கி அதை அதிகாரபூர்வமாக அன்றே அறிவித்தார் விஜய். சரியாக 27 மாதங்களில் தவெக கட்சி தேர்லை சந்தித்த நிலையில் 108 இடங்களில் வெற்றி பெற்று முதல்வர் பதவியில் விஜய் அமர்ந்திருக்கிறார்.
இதற்கிடையே விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த 2 தொகுதிகளிலுமே அவர் அதிகமான ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகம் முழுவதுமே தவெக வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் எண்ணிக்கையில்தான் வெற்றி பெற்றனர்.
குறிப்பாக 15 தொகுதிகளில் 500 முதல் 2000 ஓட்டுகள் வித்யாசத்தில் மட்டுமே தவெக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். திமுக அதிமுக தரப்பில் அதிகளவில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டதாக கூறப்படும் அந்த தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றிருந்தால் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளுடன் தனிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும்.
ஆனால் அந்த தொகுதிகளில் கிடைத்த தோல்வி தான் கடைசி நேரத்தில் போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக முஸ்லிம்லீக் கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவில் தவெக ஆட்சியமைத்தது. மேலும் அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பூர் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்ற அன்றே திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல் விஜய் ராஜினாமா செய்ததாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து நாளை மறுதினம் ஜூன் 1ம் தேதி தமிழக முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நேரில் செல்ல உள்ளார். அங்கு தனது வெற்றிக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறார். இதற்கிடையே திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் நிறுத்தப்படும் நட்சத்திர வேட்பாளர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.





