நடிகர் எம்எஸ் பாஸ்கர் துவக்கத்தில் சன்டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலில் பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அவர் காது கேட்காவராக அசத்தலான நடித்திருப்பார். ஸ்ரீப்பிரியா, நளினி நடித்த இந்த காமெடி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் எம் எஸ் பாஸ்கர் பணிசெய்திருக்கிறார். விஜயகாந்த், பிரபுதேவா, பாண்டியராஜன், வடிவேலு, நமீதா, சொர்ணமால்யா உள்ளிட்டோர் நடித்த படம் எங்கள் அண்ணா. இந்த படத்தில் ஒரு காட்சியில் குடிகாரன் கேரக்டரில் எம்எஸ் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி, இந்தியா பாகிஸ்தான், பாபநாசம், தசாவதாரம், தம்பிக்கோட்டை, திண்டுக்கல் சாரதி, டாணாக்காரன், மொழி, காற்றின் மொழி, ஏ ஒன், சபாபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக உள்ளார். துவக்கத்தில் காமெடியாக நடித்தவர், தற்போது குணச்சித்திர நடிப்பில் அசத்திக்கொண்டு வருகிறார்.
குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான பார்க்கிங் படத்தில் எம்எஸ் பாஸ்கர் வில்லன் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. வீட்டு காம்பவுண்டுக்குள் காரை நிறுத்துவதில் ஏற்படும் பிரச்னை, இறுதியில் ஹரீஷ் கல்யாணை கொலை செய்யும் அளவுக்கு எம்எஸ் பாஸ்கர் செல்வதும் அந்த கோபத்தில் அவரது ஆவேசமான நடிப்பும் ரசிகர்களை மிரட்டியது.
எந்த கேரக்டர் என்றாலும் அதில் வெளுத்து வாங்கிவிடும் திறமை உள்ள கலைஞர் எம்எஸ் பாஸ்கர். சமீபத்தில் சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியை பற்றி ஐயம் ஸாரி ஐயப்பா என்ற பாடலை கானா பாடகி இசைவாணி பாடியிருந்தார். இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றவர். தெருக்கூத்து, இசை கச்சேரிகளில் பாடி வருகிறார்.
கானா பாடகி இசைவாணி குறித்து தனது பதிவில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் கூறியிருப்பதாவது, இதுபோன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடை அமைத்து பாடினால், ‘பூசை’ சிறப்பாக இருக்கும். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு பரிசளிப்பார்கள் அல்லவா, ஐயாம் ஸாரி ஐயப்பா, அறிவு புகட்டி அனுப்பப்பா… என்று அதில் எம்எஸ் பாஸ்கர் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





