- Advertisement -
Homeபொழுதுபோக்குவாய்மொழியில் வித்தை காட்டுவது என் வேலையல்ல, அரசியல் மாநாட்டுக்கு விடுத்த அழைப்பிலேயே திராவிட கட்சிகளுக்கு சவுக்கடி...

வாய்மொழியில் வித்தை காட்டுவது என் வேலையல்ல, அரசியல் மாநாட்டுக்கு விடுத்த அழைப்பிலேயே திராவிட கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்த தலைவர் விஜய் – தளபதி நீங்க வேற லெவலுங்க!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி இயக்கத்தை துவங்கியிருக்கும் நடிகர் விஜய், தனது ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் என்பது அவரது செயல்பாடுகளில் தெளிவாக தெரிய வருகிறது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விடாமல் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் தனது கட்சியை வழிநடத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நடிகர் விஜய் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது. இது திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஆளும் கட்சியாக உள்ள திமுகவுக்கு விஜயின் அரசியல் வருகை அவர்களது அரசியல் பயணத்தில் பெரிய தடைக்கற்களாக மாறி வருகிறது.

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ம் தேதி நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்காக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் விஜய், அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநாட்டு பணிகளுக்கான குழுக்களும் தொகுதி பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொள்கை திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பது எனக்கு தெரியும்.

அரசியலில் வெற்றி தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும் கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்த தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம்முடைய வேலை அன்று. நம்மை பொறுத்தவரை செயல்வழி தான் நமது அரசியலுக்கான தாய் மொழி. மாநாட்டு களப்பணிகளை மட்டுமல்லாமல் நம் ஒட்டுமொத்த அரசியல் காணப்படுகின்றன.

- Advertisement -

நாம் அரசியல் மையமாக்கப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மனதில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவறும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்த தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்து காத்து கிடக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
மாநாட்டுக்கு வருகின்ற அனைவரும் மாநாட்டுக்கு வந்து செல்லும்போது பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம்.

அதேபோல் பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் நாம் எதைச் செய்தாலும் அதில் பொறுப்புணர்வுடன் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்தும் அது செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று விஜய் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்