- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து விமர்சனங்களில் சிக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன், அப்படி ஒரு விஷயத்தை செய்தாரா - சீப்பை...

தொடர்ந்து விமர்சனங்களில் சிக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன், அப்படி ஒரு விஷயத்தை செய்தாரா – சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நின்னுடுமா பாஸ்?

- Advertisement -

போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பிறகு நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், இப்போது லவ்டுடே இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐகே என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படம் வெற்றிப் படமாக விக்னேஷ் சிவனுக்கு அமைந்தது. அவரது அறிமுக படம் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி படமும் ஓரளவுக்கு கவனம் பெற்றது. அதன்பிறகு சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதே போல் காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் சரியாக போகவில்லை.

- Advertisement -

அதனால் இதுவரை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்ற அடையாளம்தான் அவருக்கே இருக்கிறதே தவிர, ஒரு மிகப்பெரிய வெற்றிப் பட இயக்குனர் என்ற அடையாளத்தை அவரால் பெற முடியவில்லை. இதற்கிடையே துணிவு படத்துக்கு பிறகு அஜீத்குமாரின் 63வது படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசியல் அவரை நிராகரித்துவிட்டு, மகிழ் திருமேனிக்கு விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பை அஜீத்குமார் வழங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் குறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் தனுஷ் குறித்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவுகளுக்கு இன்ஸ்டாகிராமிலும், எக்ஸ் பக்கத்திலும் கடுமையான எதிர்விமர்சனங்களை தனுஷ் ரசிகர்கள் செய்தனர். தனுஷை கீழ்த்தரமான செயல் செய்தவராக விமர்சித்த விக்கியை, தனுஷ் ரசிகர்கள் கண்டபடி திட்டி விமர்சித்தனர்.

- Advertisement -

இந்த ஆண்டில் வரவேற்பை பெற்ற சிறந்த இயக்குனர்கள் என்ற அடிப்படையில் ஒரு யூடியூப் சேனலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேர்காணல் இடம்பெற்றது. இந்த ஆண்டில் ஒரு படம் கூட இயக்காத விக்னேஷ் சிவனை எப்படி சிறந்த இயக்குனராக சொல்ல முடியும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து பயங்கரமாக கலாய்த்தனர்.

இப்படி தொடர்ந்து தன்னை பற்றிய எதிர்விமர்சனங்கள் அதிகரித்ததால், தனது எக்ஸ் பக்கத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் டீ ஆக்டிவேட் செய்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால் இன்ஸ்டா பக்கத்தை அவர் டீ ஆக்டிவேட் செய்தததாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது தொடர்வதால், அவர்களது இணையதள பக்கத்தில் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை சந்திக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்