- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாரிடம் ஷாலினி சொன்ன அந்த விஷயம் - பிரபல கார் ரேஸ் வீராங்கணை சொன்ன தகவல்...

அஜீத்குமாரிடம் ஷாலினி சொன்ன அந்த விஷயம் – பிரபல கார் ரேஸ் வீராங்கணை சொன்ன தகவல் – இப்படி உண்மையை போட்டு உடைச்சுட்டாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜீத்குமார். துணிவு படம் வெளிவந்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் ரிலீஸாகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. தல பொங்கல் கொண்டாட ஏகே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

நடிகர் அஜீத்குமாரை பொருத்தவரை ரஜினி கமல், விஜய் அஜீத் என்றுதான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். ஆனால் அவருக்கு சினிமாவில் சக நடிகர்களுடன் போட்டியிடவும், பெரிய வெற்றி படங்களை தரவும், அதிக வசூலை குவிக்கவும் ஆர்வம் இல்லை. அவரது ஆர்வம் எல்லாம் கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில்தான் இருக்கிறது.

- Advertisement -

நடிகர் ரஜினி ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டினாலும், இன்னும் 73 வயதிலும் ஹீரோவாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதே போல் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை துவங்கிய கமல் அரசியல்வாதியாக இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால் பழையபடி சினிமாவில் பிஸியாகி வருகிறார்.

இதுவரை சினிமாவில் பட்டைய கிளப்பி வரும் நடிகர் விஜய், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தலைவராக மாறி விட்டார். இப்போது நடித்துவரும் தனது 69வது படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறி, தமிழக சட்டசபை தேர்தலை வரும் 2026ம் ஆண்டில் எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.

- Advertisement -

சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பும், வாய்ப்பும் இருந்தாலும் நடிகர் அஜீத்குமாரை பொருத்தவரை சினிமாவில் நடிப்பதை விட, போட்டிகளில் பங்கேற்பதும் வெற்றி பெறுவதும்தான் அஜீத்குமாருக்கு அதிக விருப்பமாக இருக்கிறது. இப்போது துபாயில் நடக்க உள்ள கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துக்கொள்ள துபாயில் முகாமிட்டு அஜீத்குமார் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல கார் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா அஜீத்குமார் மற்றும் ஷாலினி குறித்த ஒரு தகவலை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ஒருமுறை, அஜீத்குமார் ஓட்டும் ரேஸ் காரை, ஷாலினி ஓட்டினார். காரை ஓட்டிப் பார்த்த பிறகு ஷாலினி அஜீத்குமாரிடம், இதுபோன்ற ஒரு காரை எப்படி ஓட்டறீங்க, ரொம்பவும் கஷ்டம்பா என்று வருத்தமாக கூறியிருக்கிறார். சாதாரண கார்களை போல, ரேஸ் கார்களை சுலபமாக ஓட்ட முடியாது. அதன் ஸ்டீயரிங் போன்றவை வித்யாசமாக இருக்கும் என்று அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்