- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்த சம்பவங்களை தரமாக செய்துவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி படப்பிடிப்பில் இணைந்த ராயன் பட...

அடுத்தடுத்த சம்பவங்களை தரமாக செய்துவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி படப்பிடிப்பில் இணைந்த ராயன் பட நடிகர், பிகில் பட நடிகை!

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 171 படம் கூலி தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சவுபின் சாஹிர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் ரூ. 1000 கோடி வசூல் சாதனையை புரியவில்லை. அதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படம், அந்த மெகா வசூல் சாதனையை புரிந்து ரஜினிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் லோகேஷ் கனகராஜ் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் நடிகர் கமலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் சிறந்த கம்பேக் படமாக அமைந்தது. இந்த படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியால் உள்ளம் குளிர்ந்து போன நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜூக்கு விலை உயர்ந்த சொகுசு காரை பரிசளித்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் வில்லனாக கேமியோ ரோலில் நடித்த சூர்யாவுக்கும் கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்து தன் பிரியத்தை காட்டினார். அதனால், கூலி படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் பட வெற்றிக்காக ரஜினி, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த ஆடி கார் பரிசளித்தது போல், லோகேஷ் கனகராஜூக்கு மீண்டும் கார் பரிசு கிடைக்கலாம்.

- Advertisement -

இந்நிலையில் கூலி படத்தில் 2 முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம் படத்தில் நடித்தவர். தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் தனுஷூக்கு தம்பியாக நடித்தவர். மேலும், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்திலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அதே போல் நடிகை ரெபா மோனிகா ஜான், கூலி படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே ஜருகண்டி, எப்ஐஆர் போன்ற படங்களிலும் நடித்தவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரெபா மோனிகா ஜான், கூலி படத்தில் நடிப்பதை அவரே உறுதி செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்