- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அப்படி நடந்துக்குவார்ன்னு நான் எதிர்பார்க்கலே; அவர் பிடிவாதத்தால் நானும் அதுக்கு சம்மதித்தேன் -...

நடிகர் விஜய் அப்படி நடந்துக்குவார்ன்னு நான் எதிர்பார்க்கலே; அவர் பிடிவாதத்தால் நானும் அதுக்கு சம்மதித்தேன் – பிரபல நடிகர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள விஜய், தமிழக முதல்வராவதே தனது லட்சியம் என செயல்பட்டு வருகிறார்.

கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அவர் நடத்திய தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். வழக்கமாக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நடத்தும் அரசியல் பொதுக்கூட்டங்கள், கட்சி மாநாடுகளுக்கு கட்சி தொண்டர்களை வரவழைப்பதே பெரும்பாடாக உள்ளது. நடிகர் விஜய்க்கு தானாக சேர்ந்த கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சிகள் மிரண்டு போய்விட்டன.

- Advertisement -

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி கூறியதாவது, நடிகர் விஜய்க்கு எங்கு போனாலும் ரசிகர்கள் கூட்டம் திரண்டு விடும். அதனால் வெளிமாநிலங்கள், வெளியூர்களுக்கு ஷூட்டிங் சென்றால் அவர் தனது அறையிலேயே தங்கி இருப்பார். உணவு, காபி டீ என எல்லாமே அவரது அறைக்கு வந்து விடும்.

அப்படி ஒருநாள் தங்கியிருந்த போது, என்னிடம் என்னால் 4 சுவர்களுக்குள் இப்படி இருக்க முடியவில்லை. ரொம்பவும் இறுக்கமாக உணர்கிறேன். என்னை எங்காவது வெளியே அழைத்துச் செல்லுங்கள் நட்டி என்று என்னிடம் கூறினார். நான் எதுக்கு சார் ரிஸ்க் வேண்டாமே என்று பலமுறை சொல்லியும் அவர் வெளியே செல்வதில் பிடிவாதமாக இருந்தார்.

- Advertisement -

அவரது சிரமத்தை புரிந்துக்கொண்ட நான், அவரை லுங்கி டீ சர்ட் அணிய வைத்து தலையில் உருமாலை கட்டிவிட்டு அப்படியே வெளியே அழைத்து வந்தேன். உதவியாளர்கள் யாருமே வேண்டாம் என்று மறுத்துவிட்டு, நானும் அவரும் காலாற ஒரு காட்டுக்குள் நடந்து சென்றோம். வயல்வெளி, செடிகள், வேப்ப மரக்காற்று என விஜய் அந்த இயற்கையை ரொம்பவும் ரசித்தார்.

பிறகு அங்கிருந்த ரோட்டோர கடையில் டீ சாப்பிட வேண்டும் என அடம்பிடித்தார். நான் வேண்டாம் சார், உடம்புக்கு சேராவிட்டால் என்ன செய்வது, ரூமுக்கு சென்று சாப்பிடலாம் என்று சொன்னேன். டீ தானே? ஒண்ணும் பண்ணாது என்று கூறி அந்த கடையில் டீ வாங்கி குடித்துவிட்டு மிக சாதாரண மனிதராக என்னுடன் வந்தார். அங்கிருந்த ஒரு ரோட்டோர திட்டில் உட்கார்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம், அந்த ஒரு மணி நேரம் விஜய் அவ்வளவு சந்தோஷமாக இருந்தார் என்று நட்டி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்