- Advertisement -
Homeபொழுதுபோக்குகுத்தாலத்துல போய் குழாயடில குளிச்சிட்டு வருவீங்களா? - அதுதான் தனுஷ் படம் குறித்து விளாசித் தள்ளிய...

குத்தாலத்துல போய் குழாயடில குளிச்சிட்டு வருவீங்களா? – அதுதான் தனுஷ் படம் குறித்து விளாசித் தள்ளிய ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான படம் கேப்டன் மில்லர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 14 கோடி என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த படம் குறித்து தனது விமர்சனத்தில் ப்ளு சட்டை மாறன் சகட்டுமேனிக்கு திட்டியுள்ளார்.

ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, இது ஒரு வெள்ளைக்காரன் காலத்து கதை. ஒரு சமஸ்தானத்தில் 600 ஆண்டுகளாக பொக்கிஷமாக பாதுகாத்து வரும் ஒரு சிலை பற்றி தெரிகிறது. அந்த சிலையை வெள்ளைக்காரன் கைபற்றி விடுகிறான். அதை ஹீரோ தனுஷ் சென்று மீட்டு வருவதுதான் கதை.

- Advertisement -

இந்த படத்தில் மேக்கிங், டெக்கினிக்கல், நடிகர், நடிகைகள் நடிப்பு அருமையாக உள்ளது. ஆனால் கதை இல்லை. கதையே இல்லாமல் ஒரு படம் எடுத்து வைத்துள்ளனர். திரைக்கதையிலும் ஒப்பேத்த முடியவில்லை. கேமரா ஒளிப்பதிவும், இசையும், டெக்னிக்கல் டீமும்தான் படத்தை தாங்கி பிடிக்கிறது.

இதில் சிவராஜ்குமார் மூன்று சீன்கள்தான் வருகிறார். அவர் இந்த படத்துடன் தமிழ் சினிமாவை விட்டு போய்விடுவது நல்லது. இல்லை என்றால், அவர் இதுவரை கன்னட படங்களில் நடித்து சேர்த்து வைத்துள்ள நல்ல பெயரை எல்லாம் இவர்கள் கெடுத்து விடுவார்கள். ஆளை காலி செய்து விடுவார்கள்.

- Advertisement -

அடிக்கடி கோவிலை, குடிசைகளை காட்டி அந்த ஊர் என்பதை அடையாளமாக காட்டுகின்றனர். வெல்டிங் போட வந்த நபர் போல ஒருவர் படத்துக்குள் வந்து வந்து போய்க்கொண்டே இருக்கிறார். கடைசியில் அவர் துப்பாக்கி எடுத்தும் சுடுகிறார். அவர்தான் ஹீரோ கேப்டன் மில்லர் என்கின்றனர்.

குத்தாலத்துக்கு போயிட்டு குழாயடியில் குளிச்சிட்டு வருவீங்களா, என்ற கேள்வியை போலதான் இந்த படம் இருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமாக செலவு செய்து, செட்கள் அமைத்தவர்கள், கதையே இல்லாமல் படம் எடுத்து வைத்துள்ளனர். மேக்கிங் மட்டுமே வைத்து ஒரு படத்தை எப்படி கதை இல்லாமல் ஒப்பேத்தினார்கள் என்று தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார் ப்ளு சட்டை மாறன்.

- Advertisement -

சற்று முன்