- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 நாட்களில் உலகளவில் புஷ்பா 2 படம் வசூல் நிலவரம்… அதில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை...

6 நாட்களில் உலகளவில் புஷ்பா 2 படம் வசூல் நிலவரம்… அதில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிகளா? – கங்குவா சவாலை அல்லு அர்ஜூன்தான் நிறைவேற்றுவாரா?

- Advertisement -

ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதற்கு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்துள்ள புஷ்பா 2 படத்தை எடுத்துக்காட்டாய் சொல்லலாம் போலிருக்கிறது. அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட ஹீரோயிசம் நிறைந்த மசாலா படம்தான் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது.

புஷ்பா 2 படத்தை பொருத்த வரை, செம்மர கடத்தல் என்ற சமூக விரோதச் செயலில் ஈடுபடும் ஹீரோ அல்லு அர்ஜூன், அதை தடுக்கும் போலீஸ் அதிகாரி பகத் பாசில் என்ற நிலையில், சமூக விரோதியை நாயகனாகவும், போலீஸ் அதிகாரியை வில்லனாகவும் காட்டியிருக்கும் முரண்பட்ட இந்த படம்தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

கமர்ஷியல் படமாக மட்டுமே புஷ்பா, புஷ்பா 2 படங்களை வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, லாஜிக் ஆக இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை பொதுவான ரசிகர்களால் சிறந்த படம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பொழுதுபோக்கு என்ற அம்சத்தில் மூன்றரை மணி நேரம் ஜாலியாக பார்க்க வைப்பதால் படம் வெற்றியடைகிறது.

கடந்த 5ம் தேதி வெளியான இந்த படம் கடந்த 6 நாட்களில் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்துள்ளது. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 275 கோடி ரூபாய் என்ற அசுரத்தனமான வசூலை கடந்த நிலையில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பிற மாநிலங்களிலும் வசூல் பட்டையை கிளப்பியது.

- Advertisement -

குறிப்பாக இந்தியில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 64 கோடி ரூபாய் முதலிடம், யாஷ் நடித்த கேஜிஎப் படம் 52 கோடி ரூபாய் என 2ம் இடத்திலும் இருந்த நிலையில், புஷ்பா 2 இந்தியில் முதல் நாளில் அடித்து துவம்சம் செய்த வசூல் 67.5 கோடி ரூபாய் என்பதால், இந்தியில் முதல் நாளில் அதிக வசூல் என்ற முதலிடத்தை பெற்றது.

தற்போதைய நிலவரப்படி புஷ்பா 2 ரிலீஸான 6 நாட்களில் உலக அளவில் மொத்தம் 990 கோடி ரூபாய், தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் என வசூலை கடந்துள்ளது. 7வது நாளான இன்று தற்போது 1000 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 கடந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே வேகத்தில் போனால், கங்குவா 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்ற கூறப்பட்ட நிலையில், அந்த சவாலில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 சாதிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்