லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும்“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாகவே இருப்பார் என்று அவருடன் நடித்த பல நடிகர்கள் கூறுவது உண்டு. அவரது ஷாட் முடிந்தவுடனே கேராவனுக்குள் சென்றுவிடுவாராம். காலை படப்பிடிப்பு தளத்தில் நுழையும்போது அனைவருக்கும் ஹாய் சொல்வாராம். அதன் பின் கேரவானுக்குள் சென்றுவிடுவாராம். ஷாட் ரெடி ஆன பின்பு கேராவனில் இருந்து வெளியே வந்து நடித்து முடித்துவிட்டு மீண்டும் கேரவானுக்குள் சென்றுவிடுவாராம். அவ்வளவாக யாரிடமும் நட்பு பாராட்ட மாட்டார் என்று விஜய்யை குறித்து பலரும் கூறுவது உண்டு.
இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, தனது வலைப்பேச்சு வீடியோவில் விஜய் குறித்து அதிசய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் இடைவேளைகளில் விஜய் கேராவனுக்கு போகாமல் சக நடிகர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு ஜாலியாக இருக்கிறாராம். “மாஸ்டர்” திரைப்படத்திலேயே இந்த வழக்கம் ஆரம்பித்துவிட்டாலும் “லியோ” திரைப்படத்தில் பல நடிகர்கள் நடிப்பதால் இன்னும் பயங்கரமாக கலகலவென்று அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறாராம் விஜய். இவ்வாறு ஒரு தகவலை பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி பகிர்ந்துகொண்டுள்ளார்.





