- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 திரைப்படத்தில் அந்த மாஸ் நடிகர் இடம்பெறுவது உறுதியாம்... அவரா... அவர் ஏற்கனவே முதல்...

ஜெயிலர் 2 திரைப்படத்தில் அந்த மாஸ் நடிகர் இடம்பெறுவது உறுதியாம்… அவரா… அவர் ஏற்கனவே முதல் பாகத்தில் பட்டையை கிளப்பியவர் ஆச்சே…

- Advertisement -

ரஜினிகாந்தின் இத்தனை வருட திரை உலக வாழ்க்கையிலேயே அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது ஜெயிலர்தான். தர்பார் அண்ணாத்த என தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சூப்பர் ஸ்டாருக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்தது அந்த திரைப்படம். விஜயை வைத்து பீஸ்ட் எடுத்த நெல்சன் தான் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. வழக்கமான கதை, அதிலும் இரண்டாம் பாதியில் சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லாதது என பல குறைகள் அதில் இருந்தன. ஆனால் இதை அத்தனையும் ரஜினியின் மாஸ் காட்சிகள் காணாமல் செய்துவிட்டன.

குறிப்பாக முதல் பாதியிலும், இடைவேளை காட்சியிலும் சூப்பரான சண்டைக் காட்சிகளை வைத்து அசத்தியிருந்தார் நெல்சன். இரண்டாம் பாதியில் சற்று சொதப்பி இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சி மாஸாக இருந்ததால் படம் பம்பர் ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம், கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் முக்கியமான காட்சிகளில் நடித்தது தான். இது, பான் இந்தியா திரைப்படம் ஆன ஜெயிலருக்கு மிகவும் உதவியது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் மற்றும் வேட்டையின் திரைப்படங்களில் நடித்தார் ரஜினிகாந்த்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

இதற்கான அறிவிப்பு வீடியோ அண்மையில் வெளியானது. இதில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் முந்தைய பாகத்தில் இடம்பெற்ற சிவராஜ்குமார் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இதற்காக அவர் 14 நாட்கள் கால் சீட் கொடுத்திருப்பதாக தெரிகிறது. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்திருக்கும் அவர், மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சற்று முன்