- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா வாழ்க்கை வரலாறு படம் உருவாக வாய்ப்பில்லையா? புராஜெக்ட் கைவிடப்பட்டதாக பரவும் தகவல் - இது...

இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் உருவாக வாய்ப்பில்லையா? புராஜெக்ட் கைவிடப்பட்டதாக பரவும் தகவல் – இது உருட்டா இருக்கணுமே என ஆதங்கப்படும் இசைஞானி ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி என கொண்டாடப்படும் இசைக்கலைஞர் இளையராஜா. இசை சக்கரவர்த்தி, இசை ஜாம்பவான், இசை உலகம் என எத்தனை பட்டங்களை கொடுத்தாலும் அதை எல்லாம் கடந்த ஒரு இசை பெருங்கடலாக தான் இளையராஜா தன் இசை ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்புதான் தன் மகள் பவதாரணியை அவர் பறிகொடுத்தார். ஆனால் அந்த வாழ்க்கை துயரங்களை எல்லாம் கடந்து, 83 வயதிலும் அவரே எழுதி இசையமைத்து அவரே பாடி உருவாக்கிய பாடல்தான் விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற தெனம் தெனமும் உன் நெனைப்புதான்… என்ற பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

தனிப்பட்ட முறையில் அவரது சில செயல்பாடுகள், பொதுவெளியில் அவரது பேச்சு குறித்த கடும் விமர்சனங்கள் இருந்தாலும் இசைத்துறையில் தமிழ் சினிமாவில் இசைஞானியாக இளையராஜாவின் பங்களிப்பும், இசை பணியும் காலத்தை கடந்து நின்று அவரது பெருமையை பேசும் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

இந்நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை 2 பாகங்களாக உருவாக்கவும், இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கவும், படத்தின் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசன் எழுதுவதாகவும், இந்த படத்துக்கு இளையராஜாவே இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வௌியானது. இந்த படத்தின் அறிமுக விழாவும் நடந்தது. படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவும் முடிவானது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு பிறகு ராயன், இட்லிக்கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குபேரா உள்ளிட்ட படப்பிடிப்புகளில் நடிகர் தனுஷ் தீவிர கவனம் செலுத்தினார். எப்படியிருப்பினும் 2025ம் ஆண்டின் துவக்கத்தில் இளையராஜா படப்பிடிப்பு துவங்கி விடும் என்றும் நம்பிக்கையாக ரசிகர்கள் இருந்து வந்தனர்.

ஆனால் தற்போது வெளியான சில தகவல்களின் படி, இளையராஜா படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட மும்பை நிறுவனம், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டதாலும், மேலும் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதோடு படம் குறித்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இந்த படம், கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இளையராஜா கேரக்டரில் நடிக்க தனுஷ் அதிக ஆர்வம் காட்டி சில தயாரிப்பு நிறுவனங்களை அணுகிய போதும் அது சக்சஸ் ஆகவில்லை என்பதால் இறுதி முடிவாக படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்