- Advertisement -
Homeபொழுதுபோக்குசெல்வராகவன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம்; டைட்டில் என்னப்பா இப்படி வெச்சிருக்காங்க? -...

செல்வராகவன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம்; டைட்டில் என்னப்பா இப்படி வெச்சிருக்காங்க? – ஹீரோ படத்தில் அப்படிதான் இருப்பாரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், நடிகர் தனுஷின் அண்ணன். நடிகை சோனியா அகர்வாலின் முன்னாள் கணவர் என்ற அடையாளங்களும் இவருக்கு உள்ளது. துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து காதல் கொண்டேன் ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை மயக்கம் என்ன நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை செல்வராகவன் இயக்கினார். இப்போது பல படங்களில் செல்வராகவன் நடித்தும் வருகிறார். குறிப்பாக பீஸ்ட் மார்க் ஆண்டனி ராயன் சொர்க்கவாசல் பகாசுரன் போன்ற படங்களில் செல்வராகவன் நடிப்பு வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த சூழலில் மீண்டும் இயக்குனர் செல்வராகவன் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ் குமார். இந்த படங்களில் பாடல்கள், பின்னணி இசை மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 3வது முறையாக ஜிவி பிரகாஷ் குமார், செல்வராகவன் கூட்டணி இணைகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை பேரலல் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக செல்வராகவன் இயக்கிய படம் நானே வருவேன். இந்த படம் 2022ம் ஆண்டில் வெளியானது.

- Advertisement -

நானே வருவேன் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிப்பு வரவேற்பை பெற்றாலும், திரைக்கதை ரீதியாக இந்த படம் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் இந்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது சகோதரர் நடிகர் தனுஷ் வெளியிட்டார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்திற்கு மெண்டல் மனதில் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாகவும் ஜீவி பிரகாஷ் குமார் தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயரே இப்படி இருக்கிறதே, ஹீரோவின் கேரக்டர் அதுதானா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்