- Advertisement -
Homeபொழுதுபோக்குகை நழுவிய இளையராஜா பயோபிக், தனுஷ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன், அந்த காமெடி நடிகர்...

கை நழுவிய இளையராஜா பயோபிக், தனுஷ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன், அந்த காமெடி நடிகர் பயோபிக்ல நடிக்கப் போவது உறுதி – ரூ. 3 கோடி பணமும் தந்தாச்சு!

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். துவக்கத்தில் நடிக்க வந்த போது உருவக்கேலிக்கு ஆளான தனுஷ், இன்று ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபல நடிகராக மாறியிருக்கிறார். நடிகராக மட்டுமின்றி பாடகராக, தயாரிப்பாளராக, இயக்குனராக தன் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் அவரது 50வது படம் ராயன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரே இயக்கி நடித்த இந்த படம் 155 கோடி ரூபாய் வசூலை குவித்தது. ராயன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் போன்றவர்களின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இதையடுத்து நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் வெளியாக உள்ளது. தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும், இட்லிக்கடை என்ற படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. சமீபத்தில் அவர் தனது மனைவி ஐஸ்வர்யாவை சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதும், நடிகை நயன்தாரா தனுஷ் மீது கூறிய குற்றச்சாட்டுகளும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பல மாதங்களுக்கு முன்பே இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியானது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இளையராஜா, கமல்ஹாசன், படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 பாகங்களாக இந்த படம் உருவாகும் என்றும் தகவல் சொல்லப்பட்டது.

- Advertisement -

ஆனால் பல மாதங்களாகியும் இந்த படம் உருவாவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்ட மும்பை நிறுவனம், படத்தின் பட்ஜெட் மற்றும் சில காரணங்களால் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்று விலகியதால், இந்த படமே டிராப் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் இந்த படம் வரலாம், வராமலும் போகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ், மறைந்த காமெடி நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்ஜிஆர் சிவாஜி நடித்த காலகட்டத்தில் மிகப்பெரிய காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தவர் சந்திரபாபு. சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தவர். அதனால் அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக சந்திரபாபு குடும்ப வாரிசுக்கு ரூ. 3 கோடி கொடுத்து, சந்திரபாபு வாழ்க்கை வரலாறு படத்தை உருவாக்க தனுஷ் தரப்பில் சட்டரீதியாக அனுமதி பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்