- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரியா படத்தில் நடிக்க ரூ. 35 ஆயிரம் சம்பளம் கேட்ட ரஜினி, உடனே முகம் மாறிப்...

பிரியா படத்தில் நடிக்க ரூ. 35 ஆயிரம் சம்பளம் கேட்ட ரஜினி, உடனே முகம் மாறிப் போன தயாரிப்பாளர், கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? – ரஜினி சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஒரு படத்தில் நடிக்க 140 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நட்பின் காரணமாக இதில் சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப சம்பளத்தில் 20 கோடி, 30 கோடி ரூபாய் குறைத்துக்கொள்ளவும் செய்கிறார். ஆனால் 74 வயதில் 100 கோடிக்கு மேல் ஒரு படத்தில் நடிக்க சம்பளம் வாங்குவது சாதாரண விஷயமல்ல.

ஆனால் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் படங்களில் நடிக்க வாங்கிய சம்பளம் சில ஆயிரங்கள்தான். மூன்று முடிச்சு படத்தில் நடிக்க கமல் வாங்கிய சம்பளம் ரூ. 30 ஆயிரம், ஸ்ரீதேவி வாங்கிய சம்பளம் ரூ, 5 ஆயிரம், ரஜினி சம்பளம் ரூ. 2 ஆயிரம் என்ற தகவலை, நடிகை ஸ்ரீதேவியே ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தனது சம்பளம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, முதன் முறையாக நான் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை கவிக்குயில் ஷூட்டிங்கில் சிக்மங்களூரில் சந்தித்தேன். என்னை அறைக்கு வரச்சொல்லி பேசினார். புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி என்ற 2 படங்களை அவர் அப்போது என்னை கமிட் செய்தார்.

புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நான் பண்ண வேண்டிய கேரக்டரை சிவக்குமாருக்கு கொடுத்து, சிவக்குமார் பண்ண வேண்டிய கேக்டரை எனக்கு கொடுத்து ஒரு குணச்சித்திர நடிகர் என்ற பெயரை எனக்கு கொடுத்த படம்தான் புவனா ஒரு கேள்விக்குறி. கொடூரமான வில்லன் கேரக்டரில் பிரியா படத்தில் நடித்தேன். அந்த படத்துக்காக சிங்கப்பூர் மலேசியா ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்தினர்.

- Advertisement -

பிரியா படத்தில் நடிப்பதற்காக என்னை கமிட் செய்ய பஞ்சு அருணாசலம், நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்தார். அப்போது நான் ஓட்டலில் தான் தங்கியிருந்தேன். படங்களில் நடிக்க நான் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தேன். அதனால் பஞ்சு அருணாசலம் என்ன சம்பளம் வாங்கறீங்க என்று கேட்ட போது, வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதால் 35 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்டேன்.

என்னப்பா இது 30 ஆயிரமா வாங்கறே, என்னைவிட நீ மோசமா இருக்கே, உன் படங்கள் எப்படி போகுது தெரியுமா, உன் படத்தை தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் சண்டை போட்டு வாங்கறாங்க. இதையெல்லாம் சொல்ல ஆள் இல்லையா உனக்கு, நான் உனக்கு ஒரு லட்சம் ரூபா தர்றேன். வேண்டாம் அது ராசியில்லே. ஒரு லட்சத்துக்கு 10 ஆயிரம் தர்றேன் என்று சொல்லி, பிரியா படத்தை பெரிய ஹிட் படமாக பஞ்சு அருணாசலம் கொடுத்தார் என்று ரஜினிகாந்த் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்