- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இப்படித்தான் இருக்கப் போகிறதாம்... வெளியான புதிய தகவல்... அட கேட்கவே...

விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இப்படித்தான் இருக்கப் போகிறதாம்… வெளியான புதிய தகவல்… அட கேட்கவே நல்லா இருக்குதே…

- Advertisement -

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் விடுதலை. இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற நாவலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

 

- Advertisement -

முதல் பாகத்தில் சூரியை சுற்றியே இதன் கதையை எழுதி இருந்தார் வெற்றிமாறன். காவலராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தார். பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க, அவரை காவல்துறையினர் தேடுவது போன்றும் காட்சிகள் இடம் பிடித்திருந்தன.

 

- Advertisement -

முதல் பாகத்தில் நிறுத்தி நிதானமாக கதையை கூறியிருந்தார் வெற்றிமாறன். கிளைமாக்ஸின் கடைசி 20 நிமிட காட்சிகள் பரபரப்பாக செல்ல, இரண்டாம் பாகத்திற்கான காய்ச்சல் தொற்றிக் கொண்டது. அப்போதே இதன் இரண்டாம் பாகம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் இயக்குனர் வெற்றிமாறன். அதுமட்டுமல்லாமல் படத்தில் புது கதாபாத்திரங்களும் இணைந்தனர். விஜய் சேதுபதியின் மனைவி கதாபாத்திரத்திற்கு மஞ்சுவாரியர் இடம்பெற்றார். இதே போல் கருணாஸின் மகன் கென், அனுராக் காஷ்யப், தினேஷ் உள்ளிட்டடோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

 

விடுதலை முதல் பாகத்தின் முந்தையதில் என்ன நடந்தது என்பதை தான் இரண்டாம் பாகம் விவரிக்க இருக்கிறது. அதாவது விஜய் சேதுபதியின், இளம் பருவத்தில் இருந்து அவர் போராளியாக மாறிய கதையை தான் இந்த இந்த திரைப்படம் கூற இருக்கிறதாம். இதனால் வன்முறை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

 

அதற்கு ஏற்றது போலவும் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கி இருக்கிறது. படம் இரண்டு மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. வரும் இருபதாம் தேதி விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் நிலையில், அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

சற்று முன்