- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்; நடிகர் சமுத்திரக்கனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் - இந்த முறை...

ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்; நடிகர் சமுத்திரக்கனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் – இந்த முறை வேகமாக பறந்து வருகிறது ராஜாகிளி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக அறிமுகமான அவர், நாடோடிகள் படத்தை இயக்கி இயக்குனராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் என எந்த கேரக்டர் என்றாலும் பிசிறு தட்டாமல் சிறப்பான அழுத்தமான நடிப்பை தருவர் சமுத்திரக்கனி.

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் நடிகை அனன்யா சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா நாசர் ஸ்ரீமன் வடிவுக்கரசி தம்பி ராமையா கருணாகரன் இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

திரு மாணிக்கம் படம் வருகிற 27ம் தேதி வெளியாக உள்ளது இந்த படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஏற்கனவே வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான வாழ்க்கையை சொல்லும் யதார்த்த படமாக இருப்பதால், இந்த படம் ஓடிடியில் நல்ல விலைக்கு விற்கப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

அடுத்து சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள படம் ராஜா கிளி. இந்த படத்திற்கு தம்பி ராமையா கதை வசனம் எழுதியிருக்கிறார். தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர் பழ கருப்பையா ஆடுகளம் நரேன் ரேஷ்மா இளவரசு டெப்பா ஜி பி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

வி ஹவுஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். 50 வயது கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த படமும் வருகிற 27ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே ராஜா கிளி படம் கடந்த அக்டோபர் 29ம் தேதியும் பிறகு 13ம் தேதியும் 2 முறை ரிலீஸ் தேதி அறிவித்து மாற்றப்பட்ட நிலையில், இப்போது 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

புஷ்பா 2 படம் ரிலீஸ் மற்றும் பெங்கல் புயல் காரணமாக இரண்டு முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில் இந்த முறை கண்டிப்பாக ராஜாகிளி படம் ரிலீஸ் ஆகும் என்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஒரே நாளில் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்த திரு மாணிக்கம், ராஜாகிளி என்ற 2 படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்