- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜி கணேசன் கேரக்டரை காலி செய்த கமல்ஹாசன் - போடு வெடிய, கதை அப்படி போகுதோ…...

சிவாஜி கணேசன் கேரக்டரை காலி செய்த கமல்ஹாசன் – போடு வெடிய, கதை அப்படி போகுதோ… ஆண்டவரே உங்க சுயரூபம் இதுதானா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தனது ஆசானாக குருவாக சிவாஜிகணேசனை கூறிக்கொண்டு இருக்கிறார். அன்னை இல்லத்தின் மூத்த பிள்ளை நான்தான் என்றும் அவர் மேடைகளில் பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் சிவாஜி கணேசன் கமிட் ஆன ஒரு கேரக்டரையே அவரை நடிக்க விடாமல் தடுத்தவர் என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1987ம் ஆண்டில் வெளிவந்த படம் நாயகன். இந்த படத்தை முக்தா பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படம் பம்பாயில் வாழ்ந்த வரதராஜன் முதலியார் என்ற தாதா வாழ்க்கை கதையை மையப்படுத்தி எடுத்தது. இந்த படத்தில் கமல், சரண்யா, நிழல்கள் ரவி, ஜனகராஜ், டெல்லி கணேஷ், விஜயன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த படத்தை எடுப்பதற்கு முன்பாக சிவாஜிகணேசனை வைத்து காட்பாதர் என்ற படத்தை எடுக்க தான், முக்தா பிலிம்ஸ் முடிவு செய்திருந்தது. இதுகுறித்து முக்தா ரவி கூறுகையில், திடீரென மணிரத்னத்தை இந்த படத்தில் கொண்டு வந்து, கதைையே மாற்றி, சிவாஜி கணேசனையே இந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார் கமல்ஹாசன் என்றும் முக்தா ரவி கூறியிருக்கிறார்.

முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிவாஜி கணேசன். ஹாலிவுட்டில் வெளியான காட்பாதர் என்ற படத்தின் கதையை மையப்படுத்தி அதில் வரும் அப்பா கேரக்டரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும், மகனாக கமல்ஹாசனையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சிவாஜி கணேசனிடம் பேசி, அவர் கால்ஷீட்டும் ஒதுக்கி தந்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அப்பா, மகன் கேரக்டரில் நானே நடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட கமல், மணிரத்னத்தை இந்த படத்தை இயக்க வைத்தார். அவர் மும்பை தாதா வரதராஜன் கதையை, காட்பாதர் படக்கதையை மிக்ஸ் செய்து நாயகன் படத்தை உருவாக்கி விட்டார். இந்த படத்தில் வேலு நாயக்கராக நடித்து தேசிய விருதும் பெற்றுவிட்டார்.

அதனால்தான் அந்த படத்தில் சிவாஜிகணேசன் கேரக்டரே அதில் இல்லாமல் செய்துவிட்டார் கமல்ஹாசன் என்று ஒரு உண்மையை நீண்ட ஆண்டுகளுக்கு பின் சொல்லி இருக்கிறார் சீனிவாசன் மகன் முக்தா ரவி. மேலும் ஆறு மணி நேரமாக எடுக்கப்பட்ட படத்தை இரண்டரை மணி நேரமாக மாற்றி படத்தின் பல முக்கிய காட்சிகளை ஏப்பம் விட்டுள்ளனர், என்றும் அவர் புகார் கூறியிருப்பது, இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்