- Advertisement -
Homeபொழுதுபோக்குஎக்ஸ்பிரிமென்டல் ரோலில் நடிக்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியார், அதுவும் எந்த கேரக்டர்ல நடிக்க ஆசைப்படறாங்க...

எக்ஸ்பிரிமென்டல் ரோலில் நடிக்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியார், அதுவும் எந்த கேரக்டர்ல நடிக்க ஆசைப்படறாங்க தெரியுமா?

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு வந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்திய வரவுகளாக கீர்த்தி சுரேஷை சொல்லலாம். அதே போல் லப்பர் பந்து நடிகை சுவாசிகாவை குறிப்பிட்டுச் சொல்லலாம். இப்போது சுவாசிகா சூர்யா 45 படத்திலும் சூரி நடிக்கும் மாமன் படத்திலும் நடித்து வருகிறார்.

அதே போல் நெடுஞ்சாலை, அதே கண்கள், கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவதா, மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர்தான். அவரும் இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவரும் ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்களால் வரவேற்கப்படுபவர்.

- Advertisement -

அதே போல் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள மஞ்சுவாரியார், தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் நடித்திருந்தார். இதில் தனுஷூக்கு மனைவியாக, வளர்ந்த 2 பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்போது விடுதலை 2 படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார்.

இதற்கிடையே தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் தாரா என்ற கேரக்டரில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். இதில் மனசிலாயோ என்ற பாடலுக்கு மஞ்சுவாரியாரின் நடனம் பெரிய அளவில் ஹிட் ஆனது. அந்த பாடல் இணையத்தில் வைரலாகி, டிரண்டிங் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மஞ்சுவாரியார், சினிமாவில் கதையின் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஆனால் எக்ஸ்பிரிமெண்டல் ரோல் அதாவது பரிசோதனை முயற்சியாக வித்யாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அந்த வகையில் படையப்பா நீலாம்பரி கேரக்டர் போல நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சௌந்தர்யா நடிப்பில் வெளியான படம் படையப்பா. இதில் நீலாம்பரி கேரக்டரில் நடிகை ரம்யாகிருஷ்ணன் வில்லி கேரக்டரில் அட்டகாசமான நடித்திருப்பார். அந்த கேரக்டரை மஞ்சுவாரியார் குறி வைப்பதால், படையப்பா 2 படம் வெளியானால், ரம்யாகிருஷ்ணனுக்கு போட்டியாக வந்து விடுவாரா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்