இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவியாளராக பணிபுரிந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் மிஷ்கின். புத்தகப் பிரியரான அவர், ரஷ்ய நாவலின் மேல் உள்ள ஈர்ப்பால் சண்முகராஜா என்னும் தனது பெயரை, மிஷ்கின் என்று மாற்றிக் கொண்டார். இவரது இயக்கத்தின் முதல் திரைப்படம் ஆக சித்திரம் பேசுதடி வெளியானது.
அந்தப் படத்தில் இடம்பெற்ற வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடல், பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடிக்க அதன் மூலம் சித்திரம் பேசுதடி திரைப்படம் ரீச் ஆனது. பிறகு அஞ்சாதே, நந்தலாலா, முகமூடி, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தனது படைப்புகளை ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
விஷால் இயக்கத்தில் அவர் எடுத்த துப்பறிவாளன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிப்பின் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் மிஷ்கின். லியோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க அவரது இயக்கத்தில் தற்போது ரிலீசிற்காக இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. இதில் நாம் முதலில் பார்க்கப் போவது பிசாசு படத்தின் இரண்டாம் பாகம். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் வந்து போகிறார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து, ட்ரெயின் என்னும் ஒரு முழு நேர ஆக்சன் திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின். தற்போது இதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நிச்சயமாக விஜய் சேதுபதியை வேறு ஒரு பரிணாமத்தில் பார்க்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ட்ரெயின் திரைப்படத்தின் காவல்துறை அதிகாரியாக நரேன் நடித்திருக்கிறார். நரேன் ஏற்கனவே அஞ்சாதே திரைப்படத்தில், போலீஸ் அதிகாரியாக தான் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் அதே கதாபாத்திரத்தை ட்ரெயின் படத்திற்காக விஜய் சேதுபதி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அஞ்சாதே திரைப்படத்துடன் ட்ரெயின் படத்தை மிஸ்கின் கனெக்ட் செய்து இருப்பதாக கூறப்படும் நிலையில், இது எம் சி யூ என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.





