- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம், வில்லங்கமான கேள்வி எழுப்பிய இயக்குனர் ராம்கோபால் வர்மா -...

நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவகாரம், வில்லங்கமான கேள்வி எழுப்பிய இயக்குனர் ராம்கோபால் வர்மா – அங்கே போய் போலீஸ் கைது செய்வார்களா?

- Advertisement -

கடந்த 5ம் தேதியான வெளியான நடிகர் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை 1500 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் உலகளவில் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முந்தைய நாள் 4ம் தேதி, ஐதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடந்த பிரிமியர் காட்சியில், ரேவதி என்ற 39 வயது ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது 9 வயது மகனும் படுகாயமடைந்தார்.

பிரிமியர் காட்சியை பார்க்க, படக்குழுவுடன் நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு வந்திருந்தார். அதனால் தியேட்டருக்குள் பெண் உயிரிழந்த சம்பவத்தில் அல்லு அர்ஜூன், தியேட்டர் உரிமையாளர், மேனேஜர் உள்ளிட்டோர் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நடிகர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்ததால்தான் அவரை பார்க்க ரசிகர் கூட்டம் முண்டியடித்தபோது கடுமையான நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

- Advertisement -

அவரது உயிரிழப்பு காரணமாக இருந்ததால் நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்த ஐதராபாத் போலீசார் ஒரு நாள் சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளிய வந்திருக்கிறார். நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு தெலுங்கு சினிமா சார்ந்த பல்வேறு தரப்பிலிருந்தும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அவர் தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் என்ற ஒரு மரியாதை இல்லாமல் அவரை கைது செய்தது தவறு என்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கமாக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் அவரது படங்கள் குறித்து விமர்சிக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா அல்லு அர்ஜுன் அர்ஜூன் கைது ஏற்கக் கூடியது அல்ல இதற்கு எதிராக திரையுலகம் ஒன்று திரள வேண்டும் என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷனாஷனம் என்ற படத்தை டைரக்ட் செய்தேன். அந்த படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதேவியை பார்ப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் திரண்டது அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர்.

அப்படி என்றால் போலீசார் சொர்க்கத்துக்கு சென்று இப்போது ஸ்ரீதேவியை கைது செய்யப் போகிறார்களா என்ன, சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் ரொம்பவே பிரபலமாக இருப்பதற்கு எதிராக செய்யப்படும் குற்றம் தான் இந்த கைது நடவடிக்கை என்று ராம்கோபால் வர்மா தனது கோபமான கருத்தை பதிவு செய்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்