- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகர்கள் வரிசையில் சதீஷூம் சேர்ந்து விட்டாரா, என்ன இப்படி பேசியிருக்கிறாரே, சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராச்சே?...

அந்த நடிகர்கள் வரிசையில் சதீஷூம் சேர்ந்து விட்டாரா, என்ன இப்படி பேசியிருக்கிறாரே, சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராச்சே? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சிவகார்த்திகேயன். அவரது முதல் படமான மெரினா படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் ரூ. 10 ஆயிரம். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25வது படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் ரூ. 65 கோடிக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. அமரன் படம் அந்தளவுக்கு சிவகார்த்திகேயனின் இமேஜை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.

நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் சதீஷ். அவருடன் மெரினா, எதிர்நீச்சல், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நண்பர் கேரக்டரில் நடித்துள்ளார். விஜயுடன் கத்தி படத்திலும் நடித்திருந்தார். முத்தின கத்திரிக்கா படத்தில் சுந்தர் சிக்கு நண்பராகவும் சதீஷ் நடித்திருந்தார்.

- Advertisement -

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் ஆம்பள கஜினிகாந்த் ரெக்க டெடி தங்கமகன் ரங்கா தமிழ்ப்படம் வேலைக்காரன் ராஜவம்சம் சிகரம் தொடு கலகலப்பு 2 மொட்ட சிவா கெட்ட சிவா ஆயிரம் ஜென்மங்கள் மதராச பட்டணம் கண்ணை நம்பாதே வாரிசு என பல படங்களில் சதீஷ் காமெடி ரோல்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக சதீஷ் துவக்கத்தில் காமெடி நடிகராக இருந்தவர், இப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சதீஷ் ஹீரோவாக நடித்த ஓ மை கோஸ்ட் தமிழ் படம் 2 நாய் சேகர் கான்சூரிங் கண்ணப்பன் சட்டம் என் கையில் போன்ற படங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

- Advertisement -

தமிழ் சினிமாவில் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிகர் எம்ஜிஆர் நடிக்க மாட்டார். அதே பாணியில் நடிகர் ராமராஜன் தனது படங்களில் அதுபோல நடித்ததில்லை. டி ராஜேந்தர் தன்னுடன் நடிக்கும் பெண்களை தொட்டு நடிக்க மாட்டார். அதே போல் லிப்லாக் காட்சிகளிலும், புகை பிடிக்கும் காட்சிகளிலும் சிவகார்த்திகேயன் நடித்தது இல்லை.

அந்த வரிசையில் இப்போது நடிகர் சதீஷூம் கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒரு சிறந்த மனிதராக இருக்கிறார். விருது விழா ஒன்றில் பேசிய நடிகர் சதீஷ், இதுவரை என் வாழ்க்கையில் நான் இதுவரை சிகரட் பிடித்தது இல்லை. மதுபானம் அருந்தியது இல்லை. பார்ட்டிகளுக்கு சென்றாலும் நான் இதை தவறாமல் பின்பற்றுகிறேன். இந்த தவறான பழக்கங்களால் சிலர் கெட்டுப் போவதை என் கண்ணால் நான் பார்க்கிறேன். அதனால் நண்பர்கள் இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் சதீஷ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்