- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் பட இயக்குனர் படம் என்னாச்சு? திடீரென ரூட்டு மாறிய நடிகர் தனுஷ், அடுத்து அவர்...

அமரன் பட இயக்குனர் படம் என்னாச்சு? திடீரென ரூட்டு மாறிய நடிகர் தனுஷ், அடுத்து அவர் நடிக்கப் போறது இந்த இயக்குனர் படம்தான் – அட இவர் மிரட்டிடுவாரே?

- Advertisement -

நடிகர் தனுஷ் இப்போது மிகவும் பரபரப்பான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். நடிகர் பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என அசத்திக்கொண்டு வருகிறார். தனுஷின் 50வது படம் ராயன் படத்தை அவரே நடித்து இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தொடர்ந்து இட்லிக்கடை என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.

இன்னும் சில வாரங்களில் இட்லிக்கடை படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. படப்பிடிப்பில் 2 பாடல்காட்சிகள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இட்லிக்கடை படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இளையராஜா பயோபிக், அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளிவர இருக்கிறது. அதே போல் ஏப்ரல் 10ம் தேதி, இட்லிக்கடை படம் வெளிவர இருக்கிறது. அதற்கு முன்பாக தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா நடித்த குபேரா படமும் ரிலீஸாக உள்ளது. சேகர் கம்முலா இயக்கிய இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அமரன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர் மதுரை அன்பு தயாரிப்பில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தில் நாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்துக்கான பூஜை, அறிமுக நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. அதில் தயாரிப்பாளர் மதுரை அன்புச்செழியன், நடிகர் தனுஷ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டார். அதனால் இட்லிக்கடை படத்தை முடித்த பிறகு தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், போர்த்தொழில் திரில்லர் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில்தான் நடிகர் தனுஷ் அடுத்து நடிக்க உள்ளார். வருகிற பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் விக்னேஷ் ராஜா தற்போது ஈடுபட்டுள்ளார். அதனால் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷ் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பில்லை எனத் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்